ஐக்கிய அமெரிக்காவின் புகழ் மிக்க விண்வெளி வீரர்கள்

ஐக்கிய அமெரிக்காவின் புகழ் மிக்க விண்வெளி வீரர்கள் பற்றிய தொகுப்பாகும்

எட்வர்ட் ஹிகின்ஸ் வைட்
எட்வர்ட் ஹிகின்ஸ் வைட் (Edward Higgins White) நவம்பர் 14 1930 – ஜனவரி 27 1967) அமெரிக்கவான்படையின் பணியாளரும் நாசா விண்வெளி வீரரும் ஆவார். ஜூன் 3 1965 ஆம் ஆண்டில்விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். அப்பல்லோ 1 திட்டத்தில் இணைந்து பயிற்சி பெறும் போது கொல்லப்பட்டார்.






சாலி கிறிஸ்டென் றைட்
சாலி கிறிஸ்டென் றைட்(Sally Kristen Riden) பிறப்பு: மே 26 1951 அமெரிக்க இயற்பியலாளரும்நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனையும் ஆவார். விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆவார். இவர் சாலஞ்சர் மீள்விண்கலத்தில் 1983 இலும் 1984ஸ இலும் இரு தடவைகள் விண்வெளி சென்றார். இவருக்கு முன்னர் சோவியத்தைச் சேர்ந்த வலண்டீனா டெரெஷ்கோவா (1963) மற்றும் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா (1982) ஆகிய பெண்கள் விண்ணுக்குச் சென்றிருந்தனர்.





நீல் ஆம்ஸ்ட்றோங்
நீல் ஆம்ஸ்ட்றோங் Neil_Armstrong (பிறப்பு - ஆகஸ்ட் 05 1930 தமிழ்நாட்டு எழுத்துக்கூட்டல் வழக்கு - நீல் ஆம்ஸ்ட்ராங்) சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதராவார். ஜூலை 20 1969இல் அமெரிக்காவின்அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின் மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்த மனிதரானார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும்சந்திரனில் தரையிறங்கினார்.





மைக்கேல் கொலின்ஸ்
மைக்கேல் கொலின்ஸ் Michael_collins இரண்டுமுறைவிண்வெளிக்குச் சென்ற அமெரிக்கவிண்வெளிவீரர். சந்திரனில் காலடிவைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் எட்வின் ஆல்ட்ரின் ஆகியோருடன் பயணம் செய்தார்.










கல்பனா சாவ்லா
கல்பனா சாவ்லா (Kalpana Chawla) ஜூலை 1 1961 - பெப்ரவரி 1 2003) ஓர் அமெரிக்கவிண்வெளி வீராங்கனை ஆவார். 1983 ல் சான் பியேர் ஆரிசன் (Jean-Pierre Harrison) என்பவரை மணந்தவர். 1990ல் அமெரிக்கக்குடிமகள் ஆனார். இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி இவரே. STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும் பொழுது விண்கலம் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாகநியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.




எட்வின் யூஜின் ஆல்ட்ரின்
பஸ் ஆல்ட்ரின் Buzz Aldrin இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின் Edwin Eugene Aldrin, Jr. பிறப்பு ஜனவரி 20 1930 என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்றஅப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.







அலன் பார்ட்லெட் ஷெப்பர்ட்








அலன் பார்ட்லெட் ஷெப்பர்ட் (Alan Bartlett Shepard) நவம்பர் 18 1923 – ஜூலை 21 1998 விண்வெளிக்குச்சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவதுஅமெரிக்கரும் ஆவார். முதன் முதலாக மே 5 1961இல் மேர்க்குரி விண்கலத்தில் பயணம் செய்து மொத்தம் 15 நிமிடங்கள் பூமியின் சுற்று வட்டத்தில் சுற்றித் திரும்பினார். பின்னர் 1971 இல் தனது 47வது அகவையில் அப்பல்லோ 14 விண்கலத்தில்சந்திரனுக்கு சென்று சந்திரனில் நடந்த 4வது மனிதர் ஆனார்.

Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்