Posts

சில கடல்வாழ் உயிரினங்களும் அவற்றின் தனிச் சிறப்புக்களும்

Image
சாக்குக்கணவாய் ( ஒக்டோபஸ்) சாக்குக்கணவாய் (தமிழில் பேய்க்கடம்பான்,சாக்குச்சுருளி, சிலந்திமீன்,நீராளி எனவோ அல்லது ஆங்கிலப் பெயரை ஒலிப்பெயர்த்து ஒக்டோபஸ் என்றோ அல்லது தமிழக வழக்குப்படி ஆக்டோபஸ் என்றோ வழங்கலாம்) என்னும் கடல்வாழ் விலங்கு எட்டுக்கைகள் கொண்ட எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு. சாக்குக்கணவாய் என்னும் இவ்விலங்கு மெல்லுடலிகள்(Mollusca)என்னும் தொகுப்பில் இதலைக்காலிகள்(cephalopod)என்னும் வகுப்பில் எட்டுக்காலிகள் அல்லது (Octopoda) எண்காலிகள் என்னும் உயிரின வரிசையில் உள்ள ஒரு விலங்கு. தலைக்காலிகள் (cephalopod)என்னும் வகுப்பில் 300 வகையான சாக்குக்கணவாய் உள்ளன என்று கண்டிருக்கின்றார்கள்.இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். சாக்குக்கணவாய் உடலில் எலும்பு இல்லாததா ல் மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவர இயலும். இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. கணவாய்க்கு மூன்று இதயங்கள்உண்டு . கணவாயின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். கணவாய் இரத்தத்தில் செப்பு உள்ளஈமோசயனின் (hemocyanin) என்னும் புரதப்பொருள் உள்ளதால் உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக ம...

உலகில் அழிந்து வரும் விலங்குகள் தொகுப்பு-02

Image
எனது முந்தைய பதிவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். மனிதன் தோன்றுவதற்கு முன்னேயே தோன்றிய மிருகங்கள் அழிந்து வருகிறது என்றால் அடுத்து அழியப்போவது மனிதர்கள்தான்... மிருகங்களை அழித்து வருவதன் மூலம் மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ள முற்படுகிறான் என்றுதான் கொள்ள வேண்டும்.. இன்றைய உலகில் மனிதனின் உணவுத்தேவைக்காகவும் வேறு சில தேவைக்காகவும் நாள்தோறும் விலங்குகள் வேட்டை ஆடப்படுகிறது. இதனால் சில விலங்குகள் அழியும் தறுவாய் மிக விரைவில் அவைகளில் சில விலங்குகள் .... பனிக்கரடி polar bear பனிக்கரடி (துருவக் கரடி) நில உருண்டையின் கடும் உறைபனி சூழ்ந்தஆர்க்டிக் பகுதியில் காணப்படும் இவை ஏறத்தாழ 20-25 ஆண்டுகள் வாழும் வெண்ணிறக்கரடி இனமாகும். இது இறைச்சி உண்ணும் ஊனுண்ணிப்பாலூட்டி. இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாடவல்லது. இவற்றின் முதன்மையான உணவு சீல் ஆகும். வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோகிராம்எடையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோகிராம் எடையுடையவை. இவை இளவேனிற் (வசந்த) காலத்தில் கருத்தரிக்கின்றன. இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240 நாட்களாகும். பொதுவாக இரண்டு குட்டிகள் பிறக...

உலகில் அழிந்து வரும் விலங்குகள்

Image
இன்றைய உலகில் மனிதனின் உணவுத்தேவைக்காகவும் வேறு சில தேவைக்காகவும் நாள்தோறும் விலங்குகள் வேட்டை ஆடப்படுகிறது. இதனால் சில விலங்குகள் அழியும் தறுவாய் மிக விரைவில் அவைகளில் சில விலங்குகள் ......... இந்திய காண்டாமிருகம் இந்திய காண்டாமிருகம் இந்திய மூக்குக்கொம்பன் அல்லது ஒற்றைக்கொம்பன் என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும் நேப்பாளத்திலும் பூட்டானின் சில பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டியாகும். முற்காலத்தில் இவ்விலங்கு கங்கை சமவெளி முழுவதும் வாழ்ந்து வந்தது பின்னர் ஏற்பட்ட வாழ்விட சீர்கேட்டாலும் வேட்டையாடப்பட்டதாலும் இதன் உயிர்த்தொகை குன்றி தற்சமயம் வெறும் 3000 விலங்குகள் மட்டும் இயற்கைச்சூழலில் வாழ்கின்றன . தற்போது உலகிலுள்ள காண்டாமிருகங்களிலேயே உடலளவில் மிகப்பெரிய இரண்டு காண்டாமிருகங்களில் இந்திய காண்டாமிருகமும் ஒன்றாகும் ஆண் 2200 முதல் 3000 கிலோ வரையும் பெண் 1600 கிலோ எடையில் இருக்கும். மிக அதிகபட்சமாக 3500 கிலோ எடையுள்ள விலங்கு ஒன்று காணப்பட்டதாக தரவுகள் கூறப்படுகிறது. டியூரே வின் மர அச்சுப்படம் (1515 மொகஞ்சுதாராவில் காண்டாமிருகத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு காண்டாமிருக...

விபுலானந்த மத்திய கல்லூரியின் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்

Image
காரைதீவின் கல்விக்கு அரைநூற்றாண்டையூம் கடந்து வைரவிழாக்கண்டு புத்துயிர் ஊட்டிக்கொண்டிருக்கும் விபுலானந்த மத்திய கல்லூரியின் வைரவிழாவையொட்டியான கண்காட்சி 05.07.2010 அதாவது இன்று கோலாகலமாக ஆரம்பம்

உலகில் உயிர்வாழ்ந்து அழிந்த பறவைகளில் சில

Image
கி. பி. 1500 க்குப் பின்னர் நூற்றுக்கும் அதிகமானபறவை இனங்கள் அழிந்துள்ளன. அத்துடன் பறவையினங்களின் அழிவுவீதமும் அதிகரித்துச் செல்வதாகவே உள்ளது. இப்பொழுது உலகில் உயிர்வாழும் ஏறத்தாழப் பத்தாயிரம் இனப் பறவைகளில் 1200 இனங்கள் அழிவாபத்திலுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த அழிவாபத்து மிகப் பெரும்பாலும் மனிதனாலேயே ஆகும். தீவுகளில் வாழும் குறிப்பாகப்பறக்கவியலாத பறவையினங்களே அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றன பெரிய ஓக் பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில் கனடாவுக்குஅப்பாலுள்ள தீவுகளிலும் கிறீன்லாந்து ஐஸ்லாந்து நோர்வே அயர்லாந்து மற்றும்பிரித்தானியா போன்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசிச் சோடிகள்இ 1844இ ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்குஅப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன .இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. எனைய ஓக்குகளைப் போல பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப் பறவைகள் மனிதருக்கு இலக்காகக்கூடியனவாக இருந்தன.பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே...

பறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவை

Image
பறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவையாகும். ஏறத்தாழ நாற்பது கொன்றுண்ணிகள் அற்ற பிரதேசங்களில் வாழ்ந்தமையாலேயே இப்பறவைகள் தம் பறக்கும் ஆற்றலை இழந்துள்ளன . இதற்கு தீக்கோழி விதிவிலக்காகும்பறக்காத பறவையினங்கள் இப்பொழுது உலகில் உள்ளன. நியூசிலாந்திலேயே அதிக எண்ணிக்கையான பறக்காத பறவைகள் காணப்படுகின்றன. இதற்கான காரணம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் அங்கு குடியேறாதவரை மூன்று வகையான வௌவால்களைத் தவிர வேறெந்த நிலத்தில் வாழும் பாலூட்டிகளும் காணப்படாமையாகும். பறக்காத பறவைகளின் பிரதான எதிரிகளாக பெரிய பறவைகளே காணப்பட்டன. ஆனால் மனிதக் குடியேற்றத்தின் பின் பெருமளவு பறக்காத பறவையினங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவையாகும் அவற்றுள் சில பென்குயின் பென்குயின்கள் குடும்பம் ஸ்பெனிசிடே தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற பறக்காத பறவைகளாகும். பென்குயின் வகைகளில் மிகப் பெரியதுசக்கரவர்த்தி பென்குயின்ஆகும். இது சுமார் 1.1 மீட்டர் உயரம் வரை வளருவதுடன் 35 கிலோகிராம் அல்லது அதிலும் கூடிய எடையையும் கொண்டிருக்கும். சிறிய நீலப் பென்குயின்களே (தேவதைப் பென்குயின் ...

தமிழ் மொழியும் உலகச் செம்மொழியாம்

Image
உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர் உலகில் உள்ள பல கண்டங்களில் ஒரே நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட செம்மொழிகள் இருக்கும் பெருமை இந்தியாவை மட்டுமே சாரும். அந்த வகையில் தமிழ் சமஸ்கிருதம் இரண்டும் தங்கள் தொன்மையால் உலக மொழிகளுக்கு முன்னோடியாய் விளங்குகின்ற்ன ஒரு மொழியை செம்மொழியாக தகுதி உயர்த்த மொழியியல் அடிப்படையில் விதிகள் வகுத்துள்ளனர். அந்த விதிகள் அனைத்தும் தமிழுக்குப் பொருந்தி வருவதால் செம்மொழி எனும் நிலைக்கு தமிழ் உயர்ந்து விட்டது. உலக இயற்கை மொழிகளிலேயே மிக மிக மூத்த மொழியாக தமிழ் இருப்பினும் அதற்கு உரிய காலத்தில் செம்மொழி எனும் மதிப்பு காலம் தாழ்த்தி வழங்கியுள்ளமை சற்றே நெருடலானது செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை : 1. தொன்மை 2. தனித்தன்மை 3. பொதுமைப் பண்பு 4. நடுவு நிலைமை 5. தாய்மைப் பண்பு 6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு 7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை 8. இலக்கிய வளம் 9. உயர் சிந்தனை 10. கலை இலக்கியத் தனித்தன்...