தமிழ் மொழியும் உலகச் செம்மொழியாம்

உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர்

உலகில் உள்ள பல கண்டங்களில் ஒரே நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட செம்மொழிகள் இருக்கும் பெருமை இந்தியாவை மட்டுமே சாரும். அந்த வகையில் தமிழ் சமஸ்கிருதம் இரண்டும் தங்கள் தொன்மையால் உலக மொழிகளுக்கு முன்னோடியாய் விளங்குகின்ற்ன

ஒரு மொழியை செம்மொழியாக தகுதி உயர்த்த மொழியியல் அடிப்படையில் விதிகள் வகுத்துள்ளனர். அந்த விதிகள் அனைத்தும் தமிழுக்குப் பொருந்தி வருவதால் செம்மொழி எனும் நிலைக்கு தமிழ் உயர்ந்து விட்டது. உலக இயற்கை மொழிகளிலேயே மிக மிக மூத்த மொழியாக தமிழ் இருப்பினும் அதற்கு உரிய காலத்தில் செம்மொழி எனும் மதிப்பு காலம் தாழ்த்தி வழங்கியுள்ளமை சற்றே நெருடலானது

செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை :
1. தொன்மை
2. தனித்தன்மை
3. பொதுமைப் பண்பு
4. நடுவு நிலைமை
5. தாய்மைப் பண்பு
6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு
7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை
8. இலக்கிய வளம்
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை
11. மொழிக் கோட்பாடு

செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும் அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்

செம்மொழித் தகுதி ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது.
1. இலக்கியப் படைப்புகள்
2. கலைப் படைப்புகள் இலக்கியப் படைப்புகள்

ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மொழிக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும்

கலைப் படைப்புகள்

ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டிடக்கலை சிற்பக் கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும்

உலகச் செம்மொழிகள் ன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.
  • கிரேக்க மொழி
  • சமஸ்கிருதம்
  • இலத்தீன்
  • பாரசீக மொழி
  • அரபு மொழி
  • எபிரேயம்
  • தமிழ்
  • சீன மொழி
கிரேக்கம்
கிரேக்க மொழி மிகப் பழமையான பாரம்பரியம் வாய்ந்த ஒரு மொழியாகும். கி.மு 500 ஆம் ஆண்டு முதல் கி.மு.310 ஆம் ஆண்டு காலத்தில் பல இலக்கியங்கள் இம்மொழியில் படைக்கப்பட்டுள்ளன. ஹிரொடோட்டஸ் என்பவரின் வரலாற்றுப் பதிவுகள் டுமாஸ் தனிசின் சொற்பொழிவுகள் பிளேட்டோ அரிஸ்டாட்டில் போன்றவர்களின் தத்துவநூல்கள் போன்றவை இன்றும் கிரேக்க மொழியின் இலக்கிய வளத்திற்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள 4500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டபிரமிடுகள் இன்னும் அந்நாட்டின் கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்குவதும் குறிப்பிடத் தக்கது

இலத்தீன்

ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலத்தீன் மொழியில் வர்ஜில் என்பவர் படைத்த இனீட் எனும் காவியம் சிறப்புடையது. கி.மு.70 முதல் கி.பி. 18 வரையிலான காலப் பகுதிகளில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. 1900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் இத்தாலிய நாட்டு கோலோசியம் எனும் மாபெரும் திறந்தவெளி அரங்கம் பழம் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

அரபு மொழி

அரேபிய மொழியில் எழுத்து வடிவம் கி.மு.328 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தினரின் இறுதிச் சடங்கில் பொறிக்கப்பட்டது என்கிறார்கள். அரேபிய மொழியில் குர் ஆன் சிறந்த இலக்கியமாகி விட்டது. முகலாயர்களின் பண்டையக் கட்டிடக் கலையின் சிறப்புத் தன்மைகள் உலகமே வியக்கக் கூடியதாய் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது

சீனம்
சீன இலக்கியம் மிகப் பழமை வாய்ந்த ஒன்றாகும். சீன இலக்கிய வரலாற்றில் கி.மு. 600 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் வாழ்ந்த கன்ஃபூசியஸ் இ லாவுட்ஸ் என்பவர்கள்தான்லாவுட்ஸ் 'தாவ்' எனும் நெறியை வழங்கியிருக்கிறார். இவர்கள் வழங்கிய இலக்கியம் இன்னும் உலகம் முழுவதும் எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் கட்டிடக் கலைக்கு அங்குள்ள 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் ஒன்றே போதுமானது.

ஹீப்ரூ

ஹீப்ரு மொழிக்கு கி.மு. 12 ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.ஜீடா-ஹா-நசி என்பவரால் யூதர்களின் நீதிநெறிகள் சட்டங்கள் ஆகியவை கி.பி. 200 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டது. மிஷ்னா மற்றும் கெமாரா ஆகிய இரண்டின் தொகுப்புதான் யூதர்களின் முக்கிய நூலாக இருக்கும் டாலமுட் எனப்படுகிறது
அரசர் எரோது என்பவர் 3000 ஆண்டுகளுக்கு முன்புஜெருசலேம் பகுதியில் எழுப்பிய சாலமன் ஆலயம் இம்மொழியின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

பாரசீகம்

ஈரான் நாட்டின் ஆட்சி மொழியான பாரசீகம் அரேபிய வரி வடிவத்தில்தான் எழுதப்படுகிறது. இன்றைய உலக நாகரீகங்கள் அறிவியல் முதலியவற்றை உலகிற்கு வழங்கியது முந்தைய பாரசீகம்தான். இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும்எண்கள் பாரசீகம் வழங்கியதுதான். உமர் கய்யாம் எனும் கவிஞரின் கவிதைகள் உலகம் போற்றக் கூடிய ஒன்றாகும். பாரசீகத்தின் பழமையை 2500 பழமை வாய்ந்த கட்டிடக் கலையான பெரிசிபோலிசு என்பதும் குறிப்பிடத்தக்கது

சமஸ்கிருதம்

இந்தியாவில் வடமொழி என்று அழைக்கப்பட்ட சமஸ்கிருதம் கி.மு1500 முதல் கி.மு 200 வரை வேதகால இலக்கியமாகவும் அதற்கடுத்து கி.மு. 500 முதல் கி.பி. 1000 ஆண்டுகளில் இராமாயணம் மகாபாரதம் போன்ற காப்பியங்கள் செம்மொழிக்கான நிலையைப் பெற்றது.
ஐரோப்பியர்களுக்கு வேதம் உபநிடதம் இதிகாசங்கள் காப்பியங்கள் நாடகங்கள் இதத்துவ நூல்கள் நீதி நூல்கள் போன்றவை வடமொழி இலக்கியத்தை செம்மொழியாகக் கருதச் செய்தது

தமிழ்

இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 2500 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம் இலத்தீன் மொழிகள் போல் இந்திய வரலாற்றை அறிய சமஸ்கிருதம் தமிழ் மொழிகள் தேவையாக உள்ளது. தமிழின் செம்மொழித் தகுதிக்கு சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தொல்காப்பியம் சிலப்பதிகாரம் மணிமேகலை முத்தொள்ளாயிரம் இறையனார் களவியல் போன்றவை உள்ளன.

கிரேக்கம் இலத்தீன் சீனம் ஹீப்ரூ பாரசீகம் அரேபியா ஆகியவற்றைக் காட்டிலும் தமிழ் இலக்கியம் கருத்துகள் அதிகமுடையது. இருப்பினும் பிற செம்மொழிகளான கிரேக்கம் இலத்தீன் பாரசீகம் ஹீப்ரூ அரேபியா மொழிகளுக்கான கலைப் படைப்புகளுக்குச் சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலைகள் சான்றாக இருக்கின்றன. இந்தியாவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தரையில் புதையுண்டு போனமொஹஞ்சாதரா ஹராப்பா கட்டிடக்கலைகள் இருக்கின்றன. இது திராவிடர் கட்டிடக் கலையா? அல்லது ஆரியர் கட்டிடக் கலையா? என்கிற கருத்து வேறுபாடு இன்னும் இருந்து வருகிறது. இதனால் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் பழமை அறிவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்

இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டு 12.10.2004 இல் அறிவிக்கை
வெளியிட்டுள்ளது

நன்றி இணையம்.

Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்