உலகில் அழிந்து வரும் விலங்குகள்
இன்றைய உலகில் மனிதனின் உணவுத்தேவைக்காகவும் வேறு சில தேவைக்காகவும் நாள்தோறும் விலங்குகள் வேட்டை ஆடப்படுகிறது. இதனால் சில விலங்குகள் அழியும் தறுவாய் மிக விரைவில் அவைகளில் சில விலங்குகள் .........
இந்திய காண்டாமிருகம்

முற்காலத்தில் இவ்விலங்கு கங்கை சமவெளி முழுவதும் வாழ்ந்து வந்தது பின்னர் ஏற்பட்ட வாழ்விட சீர்கேட்டாலும் வேட்டையாடப்பட்டதாலும் இதன் உயிர்த்தொகை குன்றி தற்சமயம் வெறும் 3000 விலங்குகள் மட்டும் இயற்கைச்சூழலில் வாழ்கின்றன.
தற்போது உலகிலுள்ள காண்டாமிருகங்களிலேயே உடலளவில் மிகப்பெரிய இரண்டு காண்டாமிருகங்களில் இந்திய காண்டாமிருகமும் ஒன்றாகும்
ஆண் 2200 முதல் 3000 கிலோ வரையும் பெண் 1600 கிலோ எடையில் இருக்கும். மிக அதிகபட்சமாக 3500 கிலோ எடையுள்ள விலங்கு ஒன்று காணப்பட்டதாக தரவுகள் கூறப்படுகிறது.
டியூரே வின் மர அச்சுப்படம் (1515
மொகஞ்சுதாராவில் காண்டாமிருகத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு
காண்டாமிருகம் சின்னம்


இந்திய காண்டாமிருகம் அசாம் மாநிலத்தின் மாநில விலங்காகும். மேலும் அசாம் எண்ணெய் நிறுவனம் மற்றும் சியட் டயர் நிறுவனத்தின் சின்னமும் இந்திய காண்டாமிருகம் ஆகும்
இந்திய காண்டாமிருகம் வரலாற்றில் உள்ள பதிவுகள்

சிவப்பு பாண்டா

சிவப்பு பாண்டா (Red Panda) ( நெருப்பு வண்ணப் பூனை) பூனையைவிட சற்று பெரிதான பெரும்பாலும் மரக்கறியே உண்ணும் ஒரு பாலூட்டி விலங்கு ஆகும்.கரடிப் பூனை அல்லது ஃபயர்ஃபாக்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும்மூங்கிலையே உணவாகக் கொள்கின்றன. அடர்த்தியானமுடிகளுடன்காணப்படும். இவை இமயமலையையும் தென் சீனாவையும் பிறப்பிடமாகக் கொண்டவை
சிங்கம்

சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. சிங்கத்தைத் தமிழில் அரிமா என்றும் குறிப்பாக ஆண் சிங்கத்தை ஏறு என்றும் கூறுவது வழக்கம்.
பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் அரிமா 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும்இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.
சிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை இருக்கும். 1990களில் அரிமாக்களின் எண்ணிக்கை 100இ000 வாக்கில் இருந்தும் இன்று ஏறத்தாழ 16000-30000 வரை தான் உள்ளனவாகக் கணித்துள்ளார்கள்
கடமா


கடமாவின் எருதுகள் பசுவைவிட உடலமைப்பில் பெரியவை வயதுவந்த எருது சுமார் 600 முதல் 1000 கிலோ எடையும் 1.6 முதல் 1.9 மீட்டர் உயரமும் இருக்கும். பசுக்கள் எடையளவில் ஆணின் எடையில் நாளில் ஓரு பங்கு இருக்கும்.
அடுத்த பதிவில் தொடரும்......
அரிய தகவல்கள், அரிமா,ஏறு; கடமா போன்ற புழக்கம் குறைந்த நற்றமிழ்ச் சொற்களைத் தேடி இட்டுள்ளீர்கள்.
ReplyDeleteஎத்தனை பேர் இதைப் படிப்பார்களோ? தெரியவில்லை.ஆனாலும் எழுதுங்கள்.
யாழ் மாவட்டத்திலும் ஒரு காரைதீவு இருந்து சுமார் 40 வருடமாக அதைக் காரைநகர் ஆக்கிவிட்டார்கள்.
வணக்கம்,
ReplyDelete"தக்கன வாழும். தகாதன அழியும்" [ "Survival of the fittest"] இதைப் பற்றிய குறிப்புகள்/பாடலகள் தமிழில் இருக்கிறதா என நீங்கள் அறிந்த விடயங்களை இங்கே பகிரவும்.
http://makkalthalapathi.blogspot.com/2010/07/blog-post_09.html
சிங்கம் அழிந்து வரும் விலங்கா
ReplyDeleteவிலங்கினங்களை பற்றிய அரிய தகவல்களை தந்தமைக்கு நன்றி :)
வாழ்த்துக்கள்
உயிரினங்களைப் பற்றிய ஆராய்வு அருமை.. உங்களின் தேடலுக்கு நன்றிகள். தொடருங்கோ.
ReplyDeleteமனிதன் தோன்றுவதற்கு முன்னேயே தோன்றிய மிருகங்கள் ,அழிந்து வருகிறது என்றால் ,அடுத்து அழியப்போவது மனிதர்கள்தான்...
ReplyDeleteமிருகங்களை அழித்து வருவதன் மூலம் ,மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ள முற்படுகிறான் என்றுதான் கொள்ள வேண்டும்
நல்ல பதிவு.........வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல பதிவு.........வாழ்த்துகள்
ReplyDeletenalla pathivukal...ariya vilangukalai kaappathu nam kadamai..
ReplyDelete