Posts

நம்மை அறியாமலே அதிசயம்!

Image
அன்றாடம் நாம் சிந்தித்து முடிவு செய்யாமலே பல செயல்களைச் செய்கிறோம். உதாரணமாக, கொதிக்கும் நீரில் கை பட்டால் `படக்’கென்று கையை எடுத்து விடுகிறோம். இங்கு, கொதிநீரில் விரலை வைத்த செய்தி பெருமூளைக்குச் சென்று, அது நரம்புகள் மூலம் கைத்தசைகளை ஏவிவிட்டபிறகுதான் கையை எடுக்கிறோமா? இல்லை. நீரின் வெப்பத்தில் விரல்கள் பட்டவுடனே நரம்புகள் அச்சேதியைத் தண்டுவடத்துக்கு அனுப்புகின்றன. தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மூலம் கைத்தசைகளுக்குக் கட்டளை போகிறது. உடனே கைத்தசைகள் சுருங்கிக் கரத்தை நீரில் இருந்து எடுத்துவிடுகின்றன. அதெல்லாம் சரிதான். ஆனால், வெப்பத்தால் ஏற்பட்ட வேதனையைப் பற்றிய யோசனை நமக்கு ஏற்படுகிறதே என்று கேட்கலாம். அது உண்மைதான். வெப்பத்தால் விரல் நரம்புகளில் இருந்து கிளம்பிய செய்தி, தண்டுவடத்தில் இருந்து தொடர்ந்து பெருமூளைக்குச் செல்கிறது. எனவே, சுட்ட வேதனையைப் பெருமூளை பதிவு செய்கிறது. `சுட்ட இடத்தில் மருந்து போட வேண்டுமா?’ என்று பெருமூளை சிந்திக்கிறது. ஆனால், கையைக் கொதிநீரில் இருந்து எடுத்த செயல் பெருமூளையின் உணர்ச்சிக்குக் காத்திருக்கவில்லை. இவ்வாறு பெருமூளையின் முடிவு இல்லாமலே நிகழும்...

கண்களை இமைக்கக் காரணம்

Image
நெஞ்சிலே வந்து பூத்த பூவே என்னை ஆளும் காதல் தீவே என் கண் விழியாய் நீ ஆனாய் உன் கண் இமையாய் நான் ஆவேன் மழை அல்லது பனியின்போது கார் பஸ்சில் சென்றால் கவனித்திருக்கலாம். அப்போது ஹவைப்பர்' அசைந்து கண்ணாடி மீது விழும் நீர்த் துளிகளைத் துடைத்து டிரைவர் தெளிவாகப் பார்க்க உதவும். ஆனால் எந்த ஹவைப்பரும்' நம் கண் இமைகளுக்கு நகராகாது. நம் கண் இமைகள் மேலும் கீழும் அசைந்து வைப்பரை போல் பணிபுரிகின்றன. மெல்லிய தோலால் ஆன இமைகள் நமது பார்வையைத் தடுக்காதபடி அவ்வளவு வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே தமது பணியைச் செய்கின்றன. ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான். இமைப்பது ஏன் முக்கியமானது? இமைப்பது கண்களை எவ்வாறு பாதுகாக்கிறது? இமையில் உள்ள முடிகள் விரிவாக அமைந்தவை. அதன் பணி தூசுகள் கண்ணில் விழாமல் பாதுகாப்பதே. மழை பெய்யும்போதோ காற்று மணலைச் சுற்றி வீசும்போதோ இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. மழைநீர் வியர்வை ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன. மேலும் இ மைப்பதால் கண்கள் ஈரத்துடன் இருக்கவு...

வைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக்கு உள்ளது.

Image
வைரத்தின் தன்மை மற்றும் கதிர்வீச்சுகளால் அதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆஸ்திரேலியவின் சிட்னி நகரில் உள்ள மெக்கரி பல்கலைக்கழகத்தில் வைர ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் மில்டர்ன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. வைரத்தின் மீது புறஊதா கதிர்கள் (ULTRAVIOLET LIGHT) தொடர்ந்து படுவதால் அதில் பள்ளங்கள் ஏற்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. முத்துக்களை போல வைரங்களும் ஆவியாகும் தன்மை கொண்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக புறஊதா கதிர்கள் படும் போது வைரம் விரைவில் ஆவியாகிறது. வேறு சில உலோகங்களைப் போல வைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக்கு உள்ளது. புறஊதா கதிர்களை தொடர்ந்து செலுத்தியதில் ஒரு சில வினாடிகளிலேயே வைரக் கல்லில் நுண்ணிய பள்ளங்கள் ஏற்பட்டன. அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இக்கதிர்வீச்சில் இருந்த வைரக் கற்கள் அதிகம் கரைந்தன. சூரிய ஒளியில் புறஊதா கதிர்கள் இருந்தாலும், வைரக் கல்லை பாதிக்கும் அளவுக்கு அவற்றின் வீரியம் இருப்பதில்லை. இதனால் வெயிலில் அணிந்து செல்வதால் வைரம் பாதிக்கப்படுவதில்லை. நன்றி இணையம்

உலக வெப்பமயமாதலால் பூமியின் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Image
நாம் வாழும் பூமியின் பருமன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலக தொழிற்சாலைகளில் வெளியேறும் கரியமில வாயுக்களால் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த வெப்ப அதிகரிப்பால் பூமியின் வட துருவம் மற்றும் தென் துருவத்தில் ஆண்டுக்கு 38 ஆயிரத்து 200 கோடி டன் பனிக்கட்டி உருகி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பனிக்கட்டி உருகலால் கடல்நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது. 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஐஸ் யுகத்திற்கு பின்னர் பூமி மிகுந்த அளவு எடை குறைந்து காணப்பட்டது. இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது பூமியின் மையப்பகுதி உலக வெப்பம் அதிகரிப்பால் பெருத்து உள்ளது. அண்டார்டிகாவிலும், கிறீன்லாந்திலும் ஐஸ் உருகி ஓடுவது தொடர்கிறது. ஐஸ் கட்டி காலத்தின் போது பூமியின் எடை பருமன் ஆண்டுக்கு ஒரு மில்லி மீற்றருக்கும் குறைவான அளவில் இருந்து வந்தது. ஐஸ் கட்டியின் அடுக்குகள் கடுமையானதாக இருந்த போது பூமியின் மேல் பகுதியிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. கிரேஸ் எனப்படும் புவி ஈர்ப்பு மீட்பு சோதனை செயற்கை கோள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் பூமியில் பனிக்கட்டி உருகுவது அதிகரித்து...

பௌர்ணமி தினத்தில் தேள்களில் எவ்வாறு ஒளி வீசுகின்றது.

Image
இருண்ட சூழ்நிலையில் தேள்களிலிருந்து புற ஊதாக் கதிர்வீச்சுகள் ஒளிர்ந்தால் பார்ப்பவரை திகிலடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. பூரண பௌர்ணமி தினங்களில் இயற்கைக்கு மாறான வகையில் நியோன் நீல நிற கதிர்கள் தேள்களின் உடற்பாகங்களிலீருந்து ஒளிர்கின்றன. தேள்களின் எலும்புப் பகுதிகளில் புரதப் பொருளின் மீது புற ஊதாக் கதிர்கள் தாக்கமுறுவதனால் இவ்வாறு மனிதக் கண்களுக்கு அவை ஒளி வீசுவதாக் தோன்றுகின்றது. தேள்கள் தொடர்பான ஆய்வாளர்கள் இந்த வினாவிற்கு விடைகாண நீண்ட காலத்தை செலவிட்டனர். ஏனைய தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக ஒரு சாராரும், பாலைவனங்களில் தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக மற்றொரு சாராரும் தெரிவிக்கின்றனர். இரையை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு ஒளிர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக இந்த ஒளிமாற்றச் செயற்பாடு நிகழ்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வாறெனினும், தீவிர ஆய்வுகளின் போது மேற்குறிப்பட்ட எந்தவொரு காரணியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. தேள்கள் எவ்வாறு ஒளிர்கின்றன என்பது தொடர்பில் கலிபோர்...

யானை இனத்தைச் சேர்ந்த விசித்திர விலங்கினம்

Image
இந்து சமுத்திரம் பசிபிக் சமுத்திரம் செங்கடல் உட்பட கிழக்கு ஆபிரிக்கா முதல் அவுஸ்திரேலியா வரையான கரையோர நீர்பரப்பில் டியுகோங்ஸ் விலங்கினங்கள் வாழ்கின்றன. இவற்றின் தோற்றம் மற்றும் நடத்தைகள் ஒன்றோடொன்று ஒத்தவையாக காணப்பட்ட போதிலும் டியுகோங்கிஸின் வாற் பகுதி திமிங்கிலத்தைப் போன்றது. இவ்விரண்டும் யானை இனத்தைச் சார்ந்தவை. எனினும் இவ்வாறான மிகப்பெரிய மிருகங்கள் தோற்றத்திலும் நடத்தையிலும் ஒத்தவையாக இருப்பதில்லை. நீருக்கடியிலுள்ள புல்லினத்தை பகலும் இரவுமாக இவை மேய்கின்றன. தமது உடலிலுள் தூரிகைகளால் இவற்றை கிளறிவிடுகின்றன. இவை தமது மென்மையான மூக்கினாலும் கரடுமுரடான உதடுகளினாலும் மென்று சாப்பிடுகின்றன. இந்த முலையூட்டிகள் முன்னர் சுமார் ஆறு நிமிடங்கள் நீருக்கடியில் மூழ்கி இருக்க கூடியவை. சில நேரங்களில் இவை நின்றவாறு நீருக்கு மேல் தலையை வைத்துக்கொண்டு வால்களினால் மூச்செடுக்கின்றன. இந்த வகையான விலங்கினங்கள் தமது பொழுதுகளை அதிகளவில் தனிமையாக அல்லது ஜோடியுடன் கழிக்கின்றன. இருப்பினும் சில வேளைகளில் நூற்றுக்கணக்கான விலங்கினங்களுடன் மந்தையாகவும் காணப்படுகின்றன. ஒரு வருட கால பிரசவத்துக்கு பின்னர் பெண் டிய...

கண்ணை கவரும் வினோதமான அசைவுயும் புகைப்படம்

Image
இது ஒரு புகைப் படத்தை விட சற்று அதிகமானது. ஆனால் வீடியோக் காட்சியை விட கொஞ்சம் குறைவானது…உங்களது விஷேட நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு விஷேட புதிய கலையை இரண்டு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவை அசைவுகளுடன் கூடிய படங்கள். இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும். ஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காணலாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும். ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து இந்த எனிமேஷன் போட்டோ கிராபியை உருவாக்கி உள்ளனர். ஒரு படத்தில் சன நெரிசல் மிக்க ஒரு வீதியில் ஒருவர் தனது பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு படத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு வெளிப்பகுதியில் வாகனம் ஒன்று வேகமாகச் செல்வது சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு படத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்டப் பகுதிதான் அசையும். ஆனால் அது நிச்சயம் பார்ப்பவர்களைக் கவரும், அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும். அது தான் இந்தப படக்கலையின் விஷேட அம்சம். நன்றி இணையம்