Posts

உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு

Image
ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா கொழுத்த மனிதன் (Fat Man) என்ற பெயரைக் கொண்ட இரண்டாவது அணுகுண்டை வீசி ஆகஸ்டு 9 உடன் 65 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது உலக வரலாற்றில் இரண்டு முறை அணுகுண்டு போருக்காக உபயோகபடுத்த பட்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா தன்னை தாக்கியஜப்பானை தாக்கியழிக்க 2 அணுகுண்டுகளை பயன்படுத்தியது. முதல் அணுகுண்டு சின்னப் பையன் ( Little boy ) என்று பெயரிடபட்டு ஆகஸ்டு 6ஆம் நாள் முன்காலை இரோசிமா நகரின் மீது வெடிக்க பட்டது. மூன்று நாட்களுக்குப் பின் இரண்டாவது அணுகுண்டு கொழுத்த மனிதன் ( fat man ) நாகசாகி நகரின் மீது வீச பட்டது. இந்த குண்டு வீச்சுகளால் பலியானோர் எண்ணிக்கை சுமார் 120,000. கதிரியக்கத்தினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை கணக்கிலடங்கா . ' கொழுத்த மனிதன்' ( Fat Man ) 'கொழுத்த மனிதன்' ( Fat Man ) என்பது ஜப்பான் நகரான நாகசாக்கி மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டாகும் . அமெரிக்காவின் முன்னைய அணுவாயுத வடிவமைப்புக்கு ...

உலகில் முதல் முதலில் வீசப்பட்ட (Little Boy) சின்னப் பையன் எனும் அணுகுண்டு

Image
ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசி நாளையுடன் 65 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் (Little Boy) என்ற பெயரைக் கொண்ட அணுகுண்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தது யாவரும் அறிந்ததே சின்னப் பையன் (Little Boy) போருக்குப் பின்னரான 'சின்னப் பையன்' அணுகுண்டின் மாதிரி சின்னப் பையன் (Little Boy) என்பது ஜப்பான் நகரான ஹிரோசிமா மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே(Enola Gay) என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும் சின்னப் பையன் அணுகுண்டு பற்றிய தரவுகள் வகை :- அணு ஆயுதம் அமைக்கப்பட்ட நாடு :- ஐக்கிய அமெரிக்கா எடை :-8,818.49 இறாத்தல் or 4,000 Kg நீளம் :-9.84...

இணையத்தில் எம்மவர்கள் பகுதியில் யாழ்தேவியின் நட்சத்திர பதிவராக நானும்

Image
கடந்த ஞாயிறு தினக்குரலில் அதாவது 01 ஆகஸ்ட் ல் " இணையத்தில் எம்மவர்கள்" பகுதியில் யாழ்தேவியின் நட்சத்திர பதிவராக என்னை கௌரவிக்கும் " யாழ்தேவி இணையம்" மற்றும் தினக்குரல் பத்திரிகை க்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் முதற்கண் இன்று வரை எனது வலைப்பூவை பார்த்து குறை, நிறைவான கருத்துக்களை கூறும் அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நான் வலைப்பூ மூலமாக கூறுவது என்னவென்றால் வலைப்பூவை ரசியுங்கள் உங்கள் கருத்துகளை தயங்காமல் கூறுங்கள் உங்களுக்கு பிடித்த வலைப்பூக்கு மறக்காமல் வோடடுக்களை இடுங்கள் அதன் முலம் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். நீங்களும் ஒரு வலைப்பூவாளர்களாக மாறி உங்களுக்கு பிடித்த விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . நட்சத்திரம் என்ற அந்தஸ்து பதிவர்களை பொறுத்தவரையில் மணி மகுடம் தான். அந்த வகையில் வலைப்பூவில் வாழ்த்தியவர்களை விட பத்திரிகை பார்த்து வாழ்த்தியவர்கள் பலர். எல்லோருக்கும் நன்றிகள்.

ஆகஸ்டு 1 உலக சாரணர் நாள்

Image
சாரணர் சின்னம் சாரணர் இயக்கம் உலகளாவிய அளவில் செயற்படும் ஓ ர் இளைஞர் இயக்கமாகும். இது 1907 ஆம் ஆண்டு பேடன் பவல் பிரபுவால் தொடங்கப்பட்டது. 2007 இல் உலகின் 216 நாடுகளில் ஆண்களும் பெண்களுமாக 38 மில்லியனுக்கும் அதிகமான சாரணர்கள் உள்ளனர் 1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவல் ராபர்ட் பேடன் பவல் பிரபு (Robert Baden-Powell) ( பிறப்பு பெப்ரவரி 22 1857 - இறப்பு ஜனவரி 8 1941) ஸ்கவுட் எனப்படும் சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1906 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோறுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார் ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது. புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடச...

கண்டுபிடிப்பு,1853 இல் கைவிடப்பட்ட பிரித்தானியக் கப்பல்

Image
19ம் நூற்றாண்டில் கைவிடப்பட்ட பிரித்தானிய மீட்புக் கப்பல் ஒன்று கனேடியத் தொல்லியலாளர்களால் ஆர்க்டிக் பெருங் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்.எம்.எஸ். இன்வெஸ்டிகேட்டர் என்ற இக்கப்பல் பாங்க்ஸ் தீவில் உள்ள மேர்சி குடாவில் இவ்வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. 1847 ஆம் ஆண்டில் சேர் ஜோன் பிராங்க்ளின் என்ற நாடுகாண் பயணியும் அவரது மாலுமிகளும் கப்பல்கள் செல்வதற்கான வடமேற்குப் பாதை (Northwest passage) கண்டறியும் நோக்கில் பயணம் செய்த கப்பல் காணாமல் போகவே அதனைத் தேடி இன்வெஸ்டிகேட்டர் என்ற கப்பல் ஆர்க்டிக்கை நோக்கி அனுப்பப்பட்டது. ஆனாலும் 1853 இல் இக்கப்பல் பனிக்கட்டியுள் புதைந்து போகவே அதன அதன் மாலுமிகள் கைவிட வேண்டி வந்தது. அதன் மாலுமிகளை வேறொரு கப்பல் மீட்டு வந்தது. 'இது ஒரு காணக்கிடைக்காத காட்சி' என மேர்சி குடாவில் இருந்து கனேடிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜிம் பிரெண்டிஸ் கூறினார். ராபர்ட் மக்குளூர் என்பவரைக் காப்டனாகக் கொண்ட இன்வெஸ்டிகேட்டர் கப்பல் பிரித்தானியாவில் இருந்து 1848 இல் புறப்பட்டது. பிராங்கிளினின் பயணத்தைக் கண்டுபிடிக்க அக்கப்பல் இரண்டு முறை முயன்றது. கனேடிய ஆர்க்டிக் பகுத...

ஆர்மீனியாவில் கண்டுபிடிக்கப்பட்டது, 5500 ஆண்டுகள் பழமையான காலணி

Image
5500 ஆண்டுகள் பழமையான தோலினால் செய்யப்பட்ட நன்கு பதப்படுத்தப்பட்ட காலணி ஒன்று ஆர்மீனியக் குகை ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தின் கோர்க் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த பன்னாட்டுத் தொல்லியலாளர்களைக் கொண்ட குழு ஒன்றே இதனைக் கண்டுபிடித்துள்ளது. ஆர்மீனியாவில் அரேனி என்ற இடத்தில் உள்ள இந்தக் குகையின் நிலையான குளிர் மற்றும் உலர் சூழ்நிலையே இந்தக் காலணியை இவ்வளவு காலம் பாதுகாத்து வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 'ஒரு முழுத்துண்டு தோலினால் இழையப்பட்ட இக்காலணி ஒரு துறைசார் வல்லுநர் ஒருவராலேயே செட்டப்பட்டிருக்க வேண்டும்' என முனைவர் ரொன் பின்காசி தெரிவித்தார். இக்காலணியின் இரு மாதிரிகள் ஐக்கிய இராச்சியத்திலும் கலிபோர்னியாவிலும் உள்ள இரண்டு ரேடியோகார்பன் ஆய்வுகூடங்களில் வெவ்வேறாகப் பரிசோதிக்கப்பட்டதில் இரண்டும் ஒரே முடிவுகளையே கொண்டிருந்தன. முன்னராக ஐக்கிய அமெரிக்காவின் மிசூரி மாநிலத்திலும் இசுரேலின் யூடியன் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காலணிகளே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பழமையான காலணியாக இருந்து வந்துள்ளது

நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா?

Image
நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது என்று கேட்டால் "அதுவா நிக்குது விடுங்கப்பா "என்று கூறுவோர் நம்மில் பலர். ஆனால் விஞஞானிகள் அதற்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளனர்.அதைப்பற்றிய விளக்கம் பின்வருமாறு நீர் நாரை (Flamingo)என்பது நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் கொண்ட பறவை. இப்பறவைகள் ஏன் ஒரு காலிலேயே நீண்ட நேரம் நிற்க விருப்பமுள்ளவை. விலங்குக்காட்சிச் சாலைகளுக்கு செல்லும் பலரும் கேட்கும் கேள்வி இது. ஆனாலும் இதற்கு எவரும் விளக்கமான பதில் தரவில்லை. இப்போது கரிபியன் நீர்நாரைகளை நீண்டகாலம் ஆய்வு நடத்திய அறிவியலாளர்கள் இதற்கு ஒரு விடை கண்டுபிடித்துள்ளார்கள். நீர்நாரைகள் தமது உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கே ஒரு காலில் நிற்கின்றன என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பிலடெல்பியாவின் புனித யோசப் பல்கலைக்கழகத்தின் உளவியல் வல்லுநர்கள் மத்தியூ அண்டர்சன் சேரா வில்லியம்ஸ் ஆகியோர் (பரிணாம) படி வளர்ச்சியின் நடத்தைகளை ஆய்வு செய்பவர்கள். இவர்கள் நீர்நாரைகளின் நடத்தைகளை ஆராய்ந்தார்கள். குறிப்பாக மனிதர்கள் இடக்கை வலக்கை பழக்கங்கள் கொண்டிருப்பது போல நீர்நாரைகள் தமது உடலின் எப்பகுதியை த...