ஆகஸ்டு 1 உலக சாரணர் நாள்
சாரணர் சின்னம்

சாரணர் இயக்கம் உலகளாவிய அளவில் செயற்படும் ஓர்
இளைஞர் இயக்கமாகும். இது 1907 ஆம் ஆண்டு பேடன் பவல் பிரபுவால் தொடங்கப்பட்டது. 2007 இல் உலகின் 216 நாடுகளில் ஆண்களும் பெண்களுமாக 38 மில்லியனுக்கும் அதிகமான சாரணர்கள் உள்ளனர்
1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார்.
சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவல்
.png)
ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.
புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் 1876இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். 1910 இல் ஓய்வு பெற்றார். 1941 இல் கென்யாவில் காலமானார்.

1920 இல் முதலாவது உலக சாரணீய ஜம்போரியானது ஒலிம்பியாவில் நடைபெற்றது
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி Dileep
ReplyDelete