Posts

ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள்

Image
இவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் புகழை உலகறியச்செய்தவர்கள் வேல்ஸ் இளவரசி டயானா வேல்ஸ் இளவரசி டயானா(Diana, Princess of Wales இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர்ஜூலை 1 1961 - ஆகஸ்ட் 31 1997) வேல்ஸ்இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள்வில்லியம் ஹென்றி (ஹரி) ஆகியோர்பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவத மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர். இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார்.பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்கு பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது . பட்டங்கள் டயானா வேல்ஸ் இளவரசி த லேடி டயானா ஸ்பென்சர் முடிக்குரிய மாளிகை வின்சர் மாளி அலெக்சாண்ட்ரினா விக்டோரியா விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா Alexandrina Victoria மே 24 1819 –ஜனவரி ...

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்

Image
உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் கிரிஸ்டோபர் கொலம்பஸ் கிரிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) (1451-1506) ஒரு கடல் பயணி வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (ஸ்பெயின் நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் ஜெனோவா என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது . மேலும் . வில்லெம் ஜான்சூன் வில்லெம் ஜான்சூன் (Willem Janszoon 1570 - 1630) டச்சு கடற்பயணியும் குடியேற்ற ஆளுநரும் ஆவார். இவரே ஆஸ்திரேலியாவின் கரையை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். இவர் வில்லெம் ஜான்ஸ் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அனேகமாக நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. வாஸ்கோ ட காமா வாஸ்கோ ட காமா (Vasco da Gama 1469 - டிசம்பர் 24 1524) ஒரு போர்த்துகீச நாடுகாண் பயணியாவார். இவரே இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர். இவர் ஆப்பிரிக்காவின் தென்கோடியிலுள்ள நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியா வந்தடைந்தார் லொரன்சோ டி அல்மெய்டா லோரென்சோ டி அல்மெய்டா இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த முதலாவது போர்த்துக்...

கொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன்

Image
கிரிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) (1451-1506) ஒரு கடல் பயணி வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (ஸ்பெயின் நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் ஜெனோவா என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது . கொலம்பஸின் வரலாற்று முக்கியத்துவம் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்கா பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும். உண்மையாக கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் அல்லர் ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார்.முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள் வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட ஐரோப்பாவிற்குச் சென்றுள்ளனர். இருந் தாலும் கொலம்பஸின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக்குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும். முதல் பயணம் ...

26 ல் எனக்கும் 26.........

Image
இன்று எனது பிறந்த நாள் ஆகும். வாழ்த்துக்கள் தெருவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நான் பதிவுலகத்திற்கு வந்தது சிலருடைய பதிவுகளை பார்த்து ஆசைப்பட்டதன் காரணமாகத்தான்! எனக்கு பதிவுலகதிதிற்கு வந்து எனக்கு தெரியாத சில விசயங்களை தேடி எடுதது அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.அதற்கு ஆதரவு தெரிவித்து உங்களது ஓட்டுகளை அளித்து பின்னுட்டங்கள் முலம் உச்சாகப்படுத்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 26 ம் திகதியில் பிறந்த உலகின் மிகப் பிரபலியமான நபர்களின் பெயர்கள் கீழே ஜனவரி 26 1921 - அகியோ மொறிடா ஜப்பானியத் தொழிலதிபர் 1977 - வின்ஸ் கார்டர் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் பெப்ரவரி 26 1903 - குயிலியோ நாட்டா நோபல் பரிசு பெற்ற இத்தாலியவேதியியலாளர் மார்ச் 26 1913 - பால் ஏர்டோசு அங்கேரிய கணிதவியலாளர் 1941 - ரிச்சர்ட் டாக்கின்ஸ் படிவளர்ச்சி உயிரியலாளர் ஏப்ரல் 26 1564 - வில்லியம் சேக்சுபியர் ஆங்கில எழுத்தாளர் மே 26 1799 - அலெக்சாண்டர் புஷ்கின் ரஷ்யக் கவிஞர் 1884 - மகா வைத்தியநாத ஐயர் கருநாடக இசைக்கலைஞர் ஜூன் 26 1824 - வில்லியம் தாம்சன் அயர்லாந்தைச் சேர்ந்த இய...

உலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள்

Image
உலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்களின் விபரம் சுருக்கமாக இங்கே கற்பிக்கப்படாத மேதை இராமானுசன் சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22 1887 - ஏப்ரல் 26 1920 உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார் தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory) செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின...

கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் தொகுப்ர்-02

Image
இது முந்தைய பதிவின் தொடர்ச்சியாகும். முந்தைய பதிவிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள் இட்சாக் ரபீன் (Yitzhak Rabin,) இட்சாக் ரபீன் பிறப்பு மார்ச்1 1922 – இறப்பு நவம்பர் 4 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும்இ அதன் இராணுவத் தலைவரும் ஆவார். இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள் 1974-1977 வரையும் 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில் இருந்தவர். 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதி உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.1994 ஆம் ஆண்டில் சிமோன் பெரெஸ் யாசர் அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது. சேக் முஜிபுர் ரகுமான் (Shekh Mujibur Rôhman) சேக் முஜிபுர் ரகுமான் (மார்ச் 17 1920 – ஆகஸ்ட் 15 1975) கிழக்கு பாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர். வங்காள தேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது தலைமை அமைச்சராகவும் இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் 1975...

கொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் தொகுப்பு-01

Image
ஆபிரகாம் லிங்க்கன் ஆபிரகாம் லிங்க்கன் (பிறப்பு பெப்ரவரி 12 1809—இறப்பு ஏப்ரல் 15 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் ரிப்பப்ளிக்கன் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுச் தலைவராக வெற்றி பெற்றார். 1865 இவர் வாஷிங்ட்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் ஜேம்ஸ் ஏபிராம் கார்ஃபீல்ட் நவம்பர் 19 1831 – செப்டம்பர் 19 1881) ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் படுகொலை செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே அதிபர் பதவியில் இருந்தார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் இவரின் அரசியல் எதிராளியான சார்ல்ஸ் கிட்டோ என்பவனால் ஜூலை 2 1881 இல் காலை 9:30 மணிக்கு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நிலையில் செப்டம்பர் 19 இல் இ...