உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-05

சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். மேரி க்யூரி (ஆங்கிலம் Marie Curie போலந்து மொழி:Maria Skłodowska-Curie நவம்பர் 7 1867 – ஜூலை 4 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். ரேடியம் பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். 1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார். 1934 ஜுலை 4 அன்று மேரி கியூரி மரணம் அடைந்தார். கியூரி இறந்து மூன்று மாதங்களின் பின் அவரின் மகளும் மருமகனும் கியூரியின் செயற்கை கதிர் வீச்சு பற்றிய கண்டு பிடிப்பை வெளியிட்டனர் . மைக்கேல் பரடே (Michael Faraday செப்டெம்பர் 22 1791 – ஆகஸ்டு 25 1867)) பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல் மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். புவி மையக் கோட்பாட்டுக்கு மாறாக இவர் முன்வைத்த சூரிய மையக் கோட்பாடு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்ற...