உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-02
சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும்.




லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci ஏப்ரல் 15 1452 - மே 2 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும் கண்டுபிடிப்பாளரும் பொறியியலாளரும் சிற்பியும் ஓவியரும் ஆவார். 'கடைசி விருந்து' 'மோனா லிசா'போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இடதுகையால் எழுதுபவர் வாழ்நாள் முழுதும் கண்ணாடி விம்ப எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.




பேர்டினண்ட் ஃபிறீஹெர் வொன் ரிச்தோஃபென் (Ferdinand Freiherr von Richthofen 1833 - 1905) ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளரும் பயண ஆர்வலரும் அறிவியலாளரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவில் தங்க வயல்களைக் கண்டு பிடிக்கும் பணியில் நிலவியலாளராகப் பணி புரிந்தார்.



லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci ஏப்ரல் 15 1452 - மே 2 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும் கண்டுபிடிப்பாளரும் பொறியியலாளரும் சிற்பியும் ஓவியரும் ஆவார். 'கடைசி விருந்து' 'மோனா லிசா'போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இடதுகையால் எழுதுபவர் வாழ்நாள் முழுதும் கண்ணாடி விம்ப எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.

ரேனால்டு 'பி. ஜான்சன் (Reynold B. Johnson) (1906-1998) என்னும் அமெரிக்கர் கணினி துறையில் பல புது கண்டுபிடிப்புகளும் புத்தாக்கங்கள் செய்தவர். குறிப்பாக கணினிகளில் தரவுகளையும் கோப்புகளையும் சேமித்து வைக்கும் வன்தட்டு நினைவகம் (hard disk) எனப்படும் நிலைசேமிப்பகத்தை இவர் உருவாகினார். இவரை வன்தட்டு இயக்கியின் தந்தை எனப் போற்றுவர். ஐக்கிய அமெரிக்கத் முதல்வர் (பிரெசிடெண்ட்) ரோனால்டு ரேகன் அவர்கள் 1986ல் நாட்டின் தொழிநுட்பப் பதக்கம் என்னும் தலையாய பரிசை அளித்து பெருமை செய்தார்.

ராபர்ட் ஹூக் (Robert Hooke) (1635 - 1703) இங்கிலாந்து நாட்டு இயற்பிலாளரும் கணித அறிஞரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஹூக் தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு குறித்த அவருடைய விவரணைகளுக்காக புகழ் பெற்றவர். செல் (Cell) ) என்ற சொல்லை முதலில் உருவாக்கியவரும் இவரே.

ராபர்ட் கோக் (Robert Koch டிசம்பர் 11 1843 – மே 27 1910) ஜெர்மானிய அறிவியலாளரும்இ மருத்துவரும் ஆவார். இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர் 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர் மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.
தொடரும்.........
Comments
Post a Comment