Posts

பயங்கரமான ஆட்கொல்லி மீன்

Image
உலகத்தில் மனிதர்கள்தான் மீன்களைச் சாப்பிடுவோம், ஆனால் மீன்கள் மனிதர்களைக் கொல்பவை சுறா, திமிங்கலம்னுதான் தெரியும். ஆனால்‘பிரானா’என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.   இந்த பிரானா மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகின்றன. ஆர்ஜன்டீனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்தில் காணப்படுகின்ற இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசன் நதியில் வாழ்கின்றன.   பிரானா மீன் இனங்களுள் செந்நிற வயிற்றுப் பிரானா முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்றதாகும். இவ்வின மீன்கள் ஏனையவற்றைவிட மிக வலிமையான தாடைகளையும் மிகக் கூர்மையான பற்களையும் கொண்டுள்ளன.   பிரானாமீன் இனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 செ.மீ. மேல் வளர்வதில்லை. அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள...

விரல் நுனியில் எல்லா தகவலும்

Image
  எல்லா தகவல்களையும் என் விரல் நுனியில் வைத்திருக்கிறேன்’ என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். விரல் நுனிக்கும் தகவல்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால், தகவல்களை சேகரிக்க நம் விரல் களும் ஒரு வகையில் உதவத்தான் செய்கின்றன. நாம் இந்த உலகத்தை, சுற்றுச்சூழலை உணர நமக்கு ஐந்து புலன்கள் உண்டு. அவற்றில் ஒன்று தொடுஉணர்வு. இந்த தொடு உணர்வு மூலம் தகவல்களை சேகரிக்க, நம் விரல்கள்தான் நமக்கு பெரிதும் உதவுகின்றன. உதாரணமாக, தகவல்களை துல்லியமாக சேகரிக்கக்கூடிய நவீன கருவி களைப் போன்றவை நம் விரல்கள் என்று சில வல்லுனர்கள் குறிப்பிடுவதைச் சொல்லலாம். ஆனாலும், நம் விரல்களால் தொட்டு உணர்ந்துகொள்ள முடியாத எண்ணற்ற பொருட்களும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன. விரல்களின் இந்த இயலாமையை போக்க வந்துவிட்டது `மின்னணு விரல் நுனிகள்’ என்று அட்டகாசப்படுத்துகிறார்கள் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். விரல்களின் நுனியில் (சிறிய உறை போல) அணிந்துகொள்ளக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மின்னணு விரல் நுனி கருவி விரல்களின் தொடு உணர்வுத் திறனை பல மடங்கு அதிகம...

உலகின் டாப் 20 சோம்பேறி நாடுகள் எவை தெரியவேண்டுமா.?

Image
உலகின் டாப் 20 ஒசோம்பேறிஒ நாடுகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சுறுசுறுப்புக்கு பெயர் போன ஜப்பான் 11வது இடத்தில் உள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் தென்னாபிரிக்கா, பூடான், நமீபியா, ஈராக், துருக்கி, சைப்ரஸ், இத்தாலி, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் கூட இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி உலகின் மிகப்பெரிய ஒசோம்பேறிஒ நாடாக தென் ஐரோப்பிய நாடான மால்டா உள்ளது. இங்குள்ள 71.9 சதவீதம் பேர் சோம்பேறிகளாக இருக்கிறார்களாம். உலகின் இரண்டாவது பெரிய ஒசோம்பேறிஒ நாடு தென்னாபிரிக்க நாடான ஸ்வாசிலாந்து. இங்குள்ள மக்களில் 69 சதவீதம் பேர் ஒசோம்பேறிஒகள். ஒசோம்பேறிஒ நாடுகளின் பட்டியலில் 3வது இடம் சவூதி அரேபியாவுக்கு கிடைத்துள்ளது. இங்கு வசிப்பவர்களில் 68.8 சதவீதம் பேர் சோம்பேறிகள். உலகின் 4வது பெரிய ஒசோம்பேறிஒ நாடு செர்பியா. இங்கு வசிக்கும் மக்களில் 68.3 சதவீதம் பேர் சோம்பேறிகள். உலக ஒசோம்பேறிஒ நாடுகள் பட்டியலில் 5வது இடத்தில் அர்ஜென்டினா உள்ளது. அர்ஜென்டினா மக்களில் 68.3 சதவீதம் பேர் சோம்பேறிகள். ஆயிரக்கணக்கான தீவுகளை உள்ளடக்கிய நாட...

சிவப்பு மழை,மீன் மழை,மஞ்சள் மழை ,முதலை மழை

Image
சிவப்பு மழை சிவப்பு மழை அல்லது குருதி மழை எனப்படுவது ஓர் அரிதான சிவப்பு அல்லது கபில நிறத்தில் பெய்யும் மழையாகும். இது பல வகைப்பட்ட இலக்கியங்களில் ஒரு துக்க சம்பவத்தின் அறிகுறியாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ எடுத்தாளப்பட்டுள்ளது. எனினும் இது சாதாரண இயற்கை நிகழ்வாகும். இது மழையுடன் கலந்த தூசால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கடுமையான காற்றுடன் கலந்திருக்கும் தூசானது நீராவி முகில்களாக ஒடுங்கி மழையாகப் பொழியும் போது சிவப்பு மழையாகப் பொழிவதாகக் கருதப்படுகின்றது. மழையில் கலந்திருக்கும் ஒரு வகை சிவப்பு அல்காவால் செம்மழை பொழிவதாக இலங்கையில் பொழிந்த சிவப்பு மழைக்கான விளக்கங்கள் கூறுகின்றன. இதேவேளை அண்மையில் செவனகல மன்னம்பிட்டிய ஹிக்குராங்கொட மற்றும் பதியதலாவ பகுதிகளில் பெய்த சிவப்பு மழையில் இலங்கையில் இதுவரை இனங்காணப்படாத உயிரின வகையொன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 'சிவப்பு நிற' மழை பெய்து வருகிறது.  இலங்கையின் செவனகல பிரதேசத்தில் சிவப்பு மழை பெய்திருக்கிறது. இதேபோல் இந்திகொலபெலஸ்ல ஆகி...

மிக அரிதாகவே ஏற்படும் தீ பிசாசு

Image
ஆஸ்திரேலியா, அலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் (திங்கட்கிழமை 18/09/2012) தோன்றிய fire tornado இது. மிக அரிதாகவே ஏற்படும் இதை தீ பிசாசு (fire devil) என்றும் அழைப்பார்கள். நேற்று இதை நேரில் கண்டவர்கள், “போர் விமானம் ஒன்று எழுப்பும் ஒலி போல கேட்டது. திடீரென வானத்துக்கும் பூமிக்குமான நெருப்பு கீற்று உருவானது” என்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடத்துக்கு மேல் fire tornado நீடிக்கவில்லை. அதற்குள் கிளிக் செய்யப்பட்ட போட்டோ இது. மிகப் பெரிய  நெருப்பு  சுழல் காற்று வடிவை அடைதல்  எரி சுழல் காற்று  (Fire whirl அல்லது fire tornado) எனப்படும். இது பொதுவாக  காட்டுத்தீகளின்  போது உருவாகும். அதிக  வெப்பத்தின்  காரணமாக  காற்று  மேலெளும்பலாலேயே இவ்வாறு உருவாகிறது. 1923ல் ஜப்பான் மற்றும் 2012ல் ஹவாய் ஆகிய இடங்களில் எரிசுழல் காற்று உருவாகியுள்ளது.

ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்

Image
  ஐரோப்பிய நாடான பிரான்ஸூக்கு தனித்துவமான ஒன்றாக இருப்பதோடு, அதற்கு வருமானத்தையுயும் ஈட்டித் தருவதுதான் ஈபெல் கோபுரம். இத்தாலியிலுள்ள ஒரு நிறுவனத்தின் கணிப்பின்படி, ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம் இந்த ஈபிள் கோபுரந்தான் என்று அறிவித்திருக்கின்றார்கள். தமது மண்ணிலுள்ள கொலோசியத்திற்கு மூன்றாவது இடத்தையே கொடுத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த ஈபெல்  கோபுரத்தை ஆவலுடன் சென்று பார்ப்பவர்கள் தொகை எவ்வளவாக இருக்கலாம் என்று நினைக்கின்றீர்கள்? பாரிஸ் நகரம் நினைத்து நினைத்துக் கர்வம் கொள்ளும் வகையில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஈபெல் கோபுரத்தை நேரில் காண, ஒரு வருடத்தில் 8 மில்லியன் உல்லாசப் பயணிகள் வந்து போகின்றார்கள் என்கின்றது ஒரு கணக்கு! அப்பப்பா ஜனக்கூட்டம் மொய்க்கின்றது என்றே சொல்ல வேண்டும்! பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பலம் சேர்க்கும் இந்தக் கோபுரத்தின் மதிப்பை 334 பில்லியன் என்று இத்தாலிய நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்தக்  320 மீற்றர் உயரமான கோபுரத்தோடு போட்டியிடும் ரோமானியரின் காலத்தால் அழியாத அற்புதமான கொலோசியம் இதன் பெறும...

கோபமான மீன் sarcastic fringeheads

Image
  மீன் வகைகளில் ஒன்றானதும் sarcastic fringeheads என்ற பெயரைக் கொண்டு காணப்படுகிறது. மிகவும் ஆழமான பகுதியில் காணப்படும் இந்த மீன் மிகவும் கோபம் கொண்டதாகும். இந்த மீனின் தாக்குதலுக்கு பயந்து ஓடும் அக்டோபஸைக் காணொளியில் காணலாம். s arcastic fringehead சாதாரணமான  ஒரு பெரிய வாய் மற்றும் ஆக்கிரமிப்பு பிராந்திய நடத்தை கொண்ட ஒரு மூர்க்கமான மீன். இரண்டு ஒரு பிராந்திய போர் போது , அவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக விரிவடைந்து வாய் அழுத்தி மல்யுத்தம்  செய்து ஆதிக்கத்தை நிறுவி அதில் பெரிய மீன் தான் என நிருபிக்கிறது.   sarcastic fringehead    30 சென்டிமீட்டர் இருக்கும் பெரும் pectoral துடுப்புகள் மற்றும் குறைந்த இடுப்பு துடுப்புகள் பெரும்பாலும் scaleless உள்ளன .உயர் அமுக்கத்தை உடல்களில் தாங்கி கொள்ளக்கூடியதுமஇ விலாங்கு போன்ற தோற்றம் அளிக்க கூடியது ஆகும் சான் பிரான்சிஸ்கோ , கலிபோர்னியா , மத்திய பாஜா கலிபோர்னியா , வட அமெரிக்கா கடற்கரையை , பசிபிக் போன்ற இடங்களில் காணப்படுகிறது. இந்த மீன் இனம் வரை 3 முதல் 73 மீட்டர் (9.8 முதல...