பறக்கும்போதே உறங்குகின்ற அல்பட்ரோஸ் பறவைகள்

அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்) பறவைகள் மிகத் திறனுடன் காற்றோட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி அதிக அலுப்பின்றி வெகு தொலைவு பறக்க வல்லவை. இவை நீரில் வாழும் கணவாய் (squid) மீன குறில் (krill) முதலியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள் கடலிடையே உள்ள சிறு தீவுகளில் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள இணையாக வாள்ணாள் முழுவதும் ஒன்றாகவே (இணை பிரியாமல்) வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலங்களில் ஒரு முறைக்கு ஒரு முட்டைதான் இடுகின்றன.அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்) தென்முனைப் பெருங்கடலிலும் வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும் பெரிய அலகும் மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டவை.

சதை இணைப்புள்ள கால் அடிகள் (கொய்யடிகள்) கொண்டவை. இப் பறவையினம் இன்று உயிர் வாழும் பறவையினங்களிலேயே மிகப் பெரியவைகளின் ஒன்றாகும். இவ்வினத்தின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் டியோமெடைடிடே (Diomedeidae)என்பதாகும். இவ்வினத்தில் 21 வகையான உள்ளினங்கள் உள்ளன ஆனால் அவற்றுள் 19 இனங்கள் மிக அருகிய உயிரினப்பட்டியலில் உள்ளன. பெரும் வெண் ஆல்பட்ரோஸ் என்னும் பறவையின் இறக்கை விரிப்பளவு இன்றுள்ள பறவைகள் யாவற்றினும் மிக நீளமானது.

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
ReplyDeleteபுதுமையான தகவலை அறிந்தேன் சகோதரா வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல தகவல்..நன்றி நண்பா
ReplyDeleteசுவையான தகவல்கள். நன்றி
ReplyDeleteஅருமையான பகிர்வு நண்பா வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி உங்கள் கருத்துக்கு நண்பா ம.தி.சுதா
ReplyDeleteநன்றி உங்கள் கருத்துக்கு நண்பா மைந்தன் சிவா
ReplyDeleteநன்றி ஐயா உங்கள் கருத்துக்கு Dr.எம்.கே.முருகானந்தன்
ReplyDeleteநன்றி உங்கள் கருத்துக்கு டிலீப் நண்பா
ReplyDelete