நீ குடித்த தேனில் எல்லாம் 600 விதமான பாக்டீரியாக்கள்

மன்னிக்கவும் என்னடா தலைப்பில நீ குடித்த தேனில் எல்லாம் 600 விதமான பாக்டீரியாக்கள் என்று எண்ணக்கூடும் தேன் பற்றியது அல்ல வாயில் வாழும் பாக்டீரியாக்கள் பற்றியது
“தேன் குடித்த உன் உதட்டில் தேன் குடித்தேன்..நான்
நீ குடித்த தேனில் வெறும் இனிமை...
நான் நீ குடித்த தேனில் எல்லாம் புதுமை....”

இது எனது முகப்புத்தகத்தில் நான் தேடி எடுத்து போட்ட கவிதை இதற்கு வந்த comments ல் ஒன்று
Other than Water, Electrolytes, Mucus, Antibacterial compounds, Various enzymes, & Opiorphin (a newly researched pain-killing substance found in human saliva) human saliva contains possibly as much as 8 million human and 500 million bacterial cells per mL. The presence of bacterial products causes saliva to sometimes exhibit foul odor.
அதெப்படி இந்த mixture உங்களுக்கு தேனாகியது?

அதற்காக தேடி எடுத்து போடப்பட்ட பதிவே இது

நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்போல் பத்துமடங்கு அதிகம்.

உங்களுடைய வாயில் உள்ள பாக்டீரியா குடும்பமும் உலகின் வேறொருபகுதியில் வாழும் இன்னொருவரின் வாயில் வாழும் பாக்டீரியா குடும்பமும் ஒன்றுபோல் இருப்பது என்பது அதைவிட வியப்பானது. உலகம் முழுவதிலுமிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபிறகு இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

மனிதனின் சிறுகுடலிலும், தோலிலும் குடியிருக்கும் பாக்டீரியாக்கள் பற்றியே இதுவரை ஆய்வுகள்
நிகழ்த்தப்பட்டு வந்தன. இப்போது மனிதனின் வாயில் வாழும் பாக்டீரியாக்களைப்பற்றி ஆய்வாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. நோய்களின் நுழைவுப்பாதை வாய் என்பதால் இந்த ஆய்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

உமிழ்நீரை ஆராய்தல் என்பது முகம் சுளிக்கவைக்கும் செயல் என்றாலும், நம்முடைய வாயில் யார் குடியிருக்கிறார்கள் என்பதும் அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்வது முக்கியமில்லையா? நம்முடைய பிள்ளைகள் கைசுத்தமாகவும், வாய்சுத்தமாகவும் வாழவேண்டியது அதைவிட முக்கியம்.

Comments

  1. மிகவும் பயனுள்ள தகவல், தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்..

    நன்றி

    ReplyDelete
  2. மிகவும் அருமையான தகவல், தகவலுக்கு பாராட்டுகளும் நன்றிகளும், தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. நன்றி உங்கள் கருத்துக்கு

    ReplyDelete
  4. நல்ல பதிவு சகோதரா வாழ்த்துக்கள்... இன்னொரு விடயம் இப்படி இருப்பதில் பலது தீங்கற்றது.. சிலது கட்டாயம் இருக்க வேண்டியது... தீங்கற்ற பக்டீரியாவை normal flora என்று அழைக்கிறோம்...

    ReplyDelete
  5. நன்றி உங்கள் கருத்துக்கு சகோதரா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்