Posts

நீரால் அமைக்கப்பட்ட பாலம்: நம்பினால் நம்புங்கள்

Image
நீருக்கு மேல் நீரால் பாலாமா?? நம்ப மறுக்கிறது இதயம். நம்பித்தான் ஆகவேண்டும். இது தான் தொழில் நுட்ப புரட்சி என்பார்களோ தெரியாது. நீர்பாலம் என்றழைக்கப்படும் இப்பாலமானது Germanyல் அமைந்துள்ளது. ஆறு வருட உழைப்பு 500மில்லியல் யுரோக்கள் செலவில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 918 மீற்றர் நீளமாக காணப்படும் இந்தப் பாலமானது மேற்கு Germanyல் Berlin நகருக்கு அருகாமையில் Magdeburg என்ற நகரத்தில் அமைந்துள்ளது. நன்றி:- இணையம்

வரலாற்றில் முதன் முறையாக சூரியனின் முழுப் முப்பரிமாண தோற்றம்

Image
மனித வரலாற்றில் முதன் முறையாக சூரியனின் 360 பாகை அதாவது முழுப் முப்பரிமாண தோற்றத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவினால் கடந்த 2006 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட ஸ்டீரியோ எனப்படும் இரட்டை விண்வெளி ஓடங்கள் சூரியனுக்கு நேர் எதிராகப் பயணித்து இம் முப்பரிமாண படங்களை பதிவு செய்துள்ளன. இம் முப்பரிமாண தோற்றமானது விஞ்ஞானிகளுக்கு சூரியனைப் பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது நன்றி:- இணையம்

நண்பர்களை மரபணு தான் தேர்வு செய்யும்

Image
தனக்கு உரிய நண்பர் யாராக இருக்க வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலன்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதே போன்று ஒருவர் தனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை அவரது மரபணு தான் தீர்மானிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மரபியல் பண்பு அல்லது மரபணு வகைகளின்படி குறிப்பிட்ட ஆறு மரபணுக்கள் தங்களுக்கு ஏற்ற நண்பன் யார் என்பதை தீர்மானிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இளம் வயதில் எதிர் பாலினத்தவரிடம் ஏற்படும் ஆர்வம் அல்லது இனக்கவர்ச்சியைப் போன்றும், இனம் இனத்தோடு சேரும் என்பது போன்றும், இந்த மரபணுக்கள் தங்களுக்கு ஏற்ற நண்பர்கள் இவர் தான் என்று அடையாளம் காணுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதன் இதுவரை உள் சென்றதே இல்லாத பிரமிப்பூட்டும் மிகப்பெரும் குகை

Image
பல காலங்களாக வியட்நாமை மனம் கொள்ளை கொள்ளும் வனப்புடன் கூடிய குகைகளின் நாடாகத்தான் புவியியல் ஆய்வாளர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். அவற்றில் பல குகைகளுக்குள் மனிதன் இதுவரை உள் சென்றதே இல்லை. தற்போது அங்கே உலகின் மிகப்பெரும் குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது . ஹேங் சன் தூங் எனப்படும் அக்குகை, ஒப்பீட்டளவில் மொத்த நியூயார்க் நகர மக்கள் தொகையினையும் கொள்ளளவாக கொள்ளகூடியது ஆகும். அன்னாமைட் மலைகளில் உள்ள அந்த பிரம்மாண்ட குகையினுள் பெரிய காடும் அதனூடே ஒரு ஆறும் ஓடுகிறது. இதற்கென அங்கேயே சுற்றி சுழலும் சிறு மேகக்கூட்டங்களும் உள்ளன. இந்தக் குகையின் முடிவு இன்னும் அறியப்படவில்லை. இதற்கு மலைநதி குகை என்று தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மாண்ட குகை வியட்நாமின் மத்தியில் லாவோஸ் எல்லையினையும் சேர்ந்த நில அமைப்பில் உள்ள சுமார் 150 குகைகளின் பெரும் தொடரின் ஒரு அங்கம் என்று கருதப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஹோவர்ட் மற்றும் லிம்பர்ட் ஆகியோர் இந்த ஹேங் சன் தூங் குகைக்கு வந்த போது அதனுடைய மிகப்பெரும் பக்கசுவர் அவர்களால் தாண்ட இயலாததாக இருக்கவே, மீண்டும் இந்தக் குகை...

ஆறு கோள்களைக் கொண்ட புறக்கோள் தொகுதி கண்டுபிடிப்பு

Image
கெப்லர்-11 என்ற சூரியனைச் சுற்றி ஆறு கோள்கள் வலம் வருகின்றன. படம்: நாசா பூமியில் இருந்து ஏறத்தாழ 2000 ஒளியாண்டுகள் தூரத்தில் கெப்லர்-11 என்ற சூரியனை ஒத்த விண்மீன் ஒன்றைச் சுற்றி வரும் ஆறு புறக்கோள்களை நாசாவின் கெப்லர் திட்ட வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆறு கோள்களும் பூமியை விட இரண்டு முதல் நாலரை மடங்கு ஆரையையும் இரண்டு முதல் 13 மடங்கு வரை திணிவையும் கொண்டுள்ளன. இவற்றில் ஐந்து கோள்கள் எமது சூரியனை புதன் கோள் சுற்றி வருவதைவிட குறைந்தளவு தூரத்தில் தமது சூரியனைச் சுற்றி வருகின்றன . கெப்லர்-11 தொகுதியுடன் எமது சூரியத் தொகுதி ஒப்பீடு, படம்: நாசா இந்தக் கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்கள் செவ்வாய்க்கிழமை நேச்சர் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 'கெப்லர்-11 என்பது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பான கோளமைப்பு ஆகும். இதன் அமைப்பு மூலம் இது தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்' கெப்லர் திட்ட ஆய்வாளர் ஜாக் லிசாவர் தெரிவித்தார். 'இந்த ஆறு புறக்கோள்களும் பாறைகளையும் வாயுக்களையும் கொண்ட ஒரு கலவைகள். நீரையும் இவை கொண்டிருக்கலாம்' என அவர் தெரிவித்தார். கெப்...

கண்ணீர் வடிக்கும் அன்னை மரியாள்

Image
அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் எழுந்தருளி இருக்கும் புனித அன்னை மரியாள் சிலை ஒன்றில் இருந்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கண்ணீர் வடிகின்றது. ஏராளமானவர்கள் நேரில் வந்து இந்த அதிசயத்தை பார்த்துச் செல்கின்றனர். அதிசயத்தை காண வருபவர்களில் சிலர் மரியாள் மீது நம்பிக்கை உடையவர்கள். சிலர் நம்பிக்கை இல்லாதவர்கள். ஆயினும் மரியாள் சிலையில் இருந்து கண்ணீர் ஒழுகுகின்றமையைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளார்கள். ஒரு கண்ணீர்த் துளி அன்னையின் கன்னத்தில் துல்லியமாகத் தெரிகிறது. இன்னொரு கண்ணீர்த் துளி அன்னையின் தாடையில் துலங்குகிறது. அற்புதம் என்று ஆராதிக்கின்றனர் பக்தர்கள். ஆனால் இது ஒரு எண்ணெய் கசிவு என்று சிலர் கூறுகின்றனர். நன்றி :-இணையம்

குடல் புற்று நோயை கண்டுபிடிக்கும் லெபரேடர் நாய்

Image
மனிதர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்பட்டு உள்ளதா? இல்லையா? என்பதை 90 சதவீதம் துல்லியமாக கண்டு அறியும் சக்தி நாய்களுக்கு உண்டு என்று மருத்துவ உலகம் கண்டுபிடித்து உள்ளது. இதுவரை காலமும் நாய்களின் மோப்பசக்தியானது போதைப்பொருட்கள் , வெடிபொருட்கள் என்பனவற்றைக் கண்டுபிடிப்பதற்கே உதவி வந்தன. எனினும் அண்மைக்காலமாக நாய்களின் மோப்ப சக்தியின் மூலம் நோய்களைக் கண்டறிய முடியும் என்பது தொடர்பில் அதிகளவான ஆராய்ச்சிகள் இடம் பெற்றுவருகின்றன. நாய்களின் மோப்ப சக்தி மூலம் குடல்புற்று நோயை கண்டறியலாம் என ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாய்களின் உணர் திறன் மனிதர்களின் உணர் திறனை விட 1000 மடங்கு அதிகம். ஜப்பானிய விஞ்ஞானிகள் லெபரேடர் வகையைச் சார்ந்த நாய்களை வைத்து குடல் புற்று நோயைக்கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சிக்கு பின் இந்த நாய் மனிதர்களுக்கு வரும் குடல் புற்று நோயினை சரியாக கண்டுபிடிப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். நாய் கண்டுபிடிப்பவற்றில் ஏறத்தாழ 98 சதவிகிதம் சரியாக இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். புற்றுநோய்க்கு ஆளானவர்களின் மூச்சு மற்றும் அவர்களின் மலம் ஆகி...