Posts

தேள்கள் பற்றிய அதிசய தகவல்கள்

Image
தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன. தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறிக்கை தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம். உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை...

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?

Image
மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? என்ற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்தது அதற்கான விடையை தேடி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது. இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம் ஆகியவற்...

பிறந்த நாள் வாழ்த்து Suranuthan Sothiswaran

Image
எமது karaitivu.org இணையத்தளத்தின் ஸ்தாபக ஆசிரியரும், PLUS Academy , PLUS Association ஆகிய அமைப்புக்களின் ஸ்தபாகரும், பிரபல ஆங்கில மற்றும் கணினி ஆசிரியரும் காரைதீவின் இணையத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருபவருமான Mr. Suranuthan Sothiswaran (Projector Officer, RDC ) அவர்கள் தனது 27 வது பி்றந்த தினத்தை இன்று 17-10-2010 அன்று வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.. அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ karaitivu.org WebTeam , PLUS Association , Jet Sports Club , 100 fun boys , காரைதீவு நந்தவன சனசமூக நிலையம் , நந்தவன விளையாட்டுக்கழகம் & வலைப்பூவுலக நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.

உலகின் மிக நிளமான கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை

Image
உலகின் மிக நிளமான புகையிரத சுரங்கங்கப் பாதை சுவிஸ்லாந்தின் கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை ஆனது 15.10.2010 வெள்ளிகிழமை நேற்று கடைசி 2 மீற்றர் நிளமான பாறை துளையிடப்பட்டு புகையிரத சுரங்கங்கப் பாதை முடிவுக்கு வந்தது. இதனுடைய நீளம் 35.4 miles மைல்கள் (57km கிலோமீற்றர்).இது புகையிரத சுரங்கங்கப் பாதையின் ஒரு முக்கியமான மைல் கல்லாகும். ஜரோப்பாவின் அதிவேக புகையிர தொடர்பாடலுக்க இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும் ஜரோப்பாவின் அதிவேக புகையிர தொடர்பாடலுக்க இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும் இந்தச் சுரங்கப் பாதையானது 2017ம் ஆண்டளவில் பாவனைக்கு திறந்துவிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். சுவிஸ் அரசாங்கத்தின் தகவல்களின் பிரகாரம் மிக ஆளமான சுரங்கத்தில் புதிய முறைமைகளுடன் காற்றோட்டமானதாகவும் அபாயங்களிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பானதாகவும் உலகில் பாதுகாப்பான சுரங்கப் பாதையாக இந்தச் சுரங்கப் பாதை விளங்குமென தெரிவிக்கப்படுகின்றது. இந்த சுரங்கமானது வடக்கு சுவிட்சர்லாந்தினையும் ரிசினோ பிரதேசத்தினையும் இணைக்கும் வகையில் அல்ப்ஸ் மலையினூடாக அமைக்கப்பட்டது.

மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச்சி

Image
அ ணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உயிர் அழிவு ஏற்பட்ட பின் சுடுகாடாக மாறியிருக்கும் பிராந்தியத்தை பார்க்க கூடிய ஒரு உயிரினம் ஒன்று உள்ளது என்றால் அது வீட்டில் வாழும் கரப்பான் பூச்சிதான். கரப்பான் பூச்சி மனிதனை விட பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் இவை தோன்றியது மனித இனம் தோன்றுவதற்கு முன். அதாவது 350 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியவை. உலகின் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வாழும் கரப்பான் பூச்சியின் தாயகம் ஜேர்மனி நாடாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாகும். தற்போது உலகில் சுமார் 3490 கரப்பான் இனங்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஆறு குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி தலை நெஞ்சு வயிறு எனும் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு மூன்று சோடி கால்களும்ஒரு சோடி உணர்கொம்பும் உண்டு.கரப்பான் பூச்சிக்கு முதுகெலும்பு கிடையாது. இரண்டு சோடி அல்லது ஒரு சோடி சிறகுகள் கணப்பட்டாலும் சில கரப்பான் பூச்சிக்கு சிறகுகள் கிடையாது.கரப்பான் பூச்சியின் இரத்தம...

பிறந்த நாள் வாழ்த்து (Prasath Mendis Appu)

Image
இன்று தனது 27 வது பிறந்த தினத்தை கொண்டாடும் எமது www.karaitivu.org இணையத்தளத்தின் ஸ்தாபக ஆசிரியரும்,காரைதீவின் இணையத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருபவருமான Dr. மென்டிஸ் அப்பு பிரசாத் Prasath Mendis Appu அவர்கள் தனது பிறந்த தினத்தை 05.10.2010 கொண்டாடுகின்றார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க என karaitivu.org WebTeam , வலைப்பூ நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம்

Image
அம்பர் ( amber ) என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக் குறைய கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் ஆகும். அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை பொன்னம்பர் பூவம்பர் மீனம்பர் தீயின்வயிரம் செம்மீன் வயிரம் மலக்கனம் கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது. மரப்பிசினில் விழுந்துவிட்ட சிறு பூச்சிகளும் அப்படியே காலத்தால் உறைந்திருப்பது பார்க்க வியப்பூட்டுவதாகும். இப்படி தொல் பழங்காலத்து பயினி மரம் போன்ற மரங்களின் மரப்பிசினில் விழுந்து விட்ட பூச்சிகளில் சில இன்று நிலவுலகில் இல்லாமல் முற்றுமாய் அற்றுப்போய்விட்டவை. இந்த அம்பர் கட்டிகள் பால்ட்டிக் கடற்கரைகளிலும் கடலடியிலும் கிடைக்கின்றன. சில சிறு அம்பர் கட்டிகள் மீனின் வயிற்றில் இருந்தும் எடுத்துள்ளனர். திட்டப்படாத அம்பர் கற்கள் திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் 'அம்பர்' எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது . வாசனை பொருட்களில் எத்தனையோ ரகங்கள்...