உலகின் மிக நிளமான கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை

உலகின் மிக நிளமான புகையிரத சுரங்கங்கப் பாதை சுவிஸ்லாந்தின் கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை ஆனது 15.10.2010 வெள்ளிகிழமை நேற்று கடைசி 2 மீற்றர் நிளமான பாறை துளையிடப்பட்டு புகையிரத சுரங்கங்கப் பாதை முடிவுக்கு வந்தது.

இதனுடைய நீளம் 35.4 miles மைல்கள் (57km கிலோமீற்றர்).இது புகையிரத சுரங்கங்கப் பாதையின் ஒரு முக்கியமான மைல் கல்லாகும்.

ஜரோப்பாவின் அதிவேக புகையிர தொடர்பாடலுக்க இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்


ஜரோப்பாவின் அதிவேக புகையிர தொடர்பாடலுக்க இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்

இந்தச் சுரங்கப் பாதையானது 2017ம் ஆண்டளவில் பாவனைக்கு திறந்துவிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

சுவிஸ் அரசாங்கத்தின் தகவல்களின் பிரகாரம் மிக ஆளமான சுரங்கத்தில் புதிய முறைமைகளுடன் காற்றோட்டமானதாகவும் அபாயங்களிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பானதாகவும் உலகில் பாதுகாப்பான சுரங்கப் பாதையாக இந்தச் சுரங்கப் பாதை விளங்குமென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சுரங்கமானது வடக்கு சுவிட்சர்லாந்தினையும் ரிசினோ பிரதேசத்தினையும் இணைக்கும் வகையில் அல்ப்ஸ் மலையினூடாக அமைக்கப்பட்டது.

Comments

  1. உலகின் மிகநீளமான சுரங்கப்பாதை என்ற சிறப்புப் பெற்றுள்ள, சுவிஸ் சென். கோத்தார்டோ சுரங்கப்பாதையிக் இறுதிக்கட்டத் தகர்ப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. எட்டு ஆண்களுக்கு முன் அல்ப்ஸ் மலையின் வடக்கு தெற்குப் பகுதிகளில் இருந்து மலையைக் குடையும் பணி தொடங்கப்பட்டது.

    57 கிலோ மீற்றர் நீளமான இந்தப்பாதையின் நடுப்பகுதியில், சுமார் 2 மீற்றர் கனமான பாறைத் தொகுதியை, வடபகுதியில் இருந்து 'சிச்சி' எனற குறியீட்டுப் பேரைக் கொண்ட துளையிடும் இயந்திரம், ஐரோப்பிய நேரம் பகல் 2.05 மணிக்குத் துளையிடத் தொடங்கியது. சரியாக 2.18 நிமிடத்திற்கு, 2000க்கும் அதிகமான பார்வையாளர்கள் நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கானோர் உலகின் பலபாகங்களிலும் இருந்து தொலைக்காட்சி வழியாகவும் பாரத்திருக்க, பலத்த கரவொலிகளின் மத்தியில், தனது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி, சுரங்கப்பாதையின் இறுதிப்பகுதியைத் துளைத்தெடுத்து, இரு பகுதிகளையும் ஒன்றினைத்தது.

    இணைக்கப்பட்ட பாதையின் வழியாக 'ஹோலி பார்பரா' உருவப் பொம்மையுடன், வடபகுதியிலிருந்து தென்பகுதிக்குச் சுரங்கப்பணியாளர்களில் ஒருவராகிய Hubert Baer கண்ணீர்மல்க, மகிழ்சிப்பெருக்கோடு முதல் அடியை எடுத்து வைத்து வந்தார். அவரைத் தொடந்து தொழிலாளர்களும் தொழில் நுட்பவியலாளர்களும், மறுபுறத்துக்கு வர, மறுபுறத்தில் திரண்டிருந்த பார்வையாளர்களும் தொழிலாளர்களும் மகிழ்ச்சிப் பெருக்கோடு, கரவொலி எழுப்பி வரவேற்றார்கள்.

    பலநூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பு, எட்டுப் பணியாளர்களின் உயிர்த்தியாகம், 13.6 பில்லியன் அமெரிக்க டொலர் பொருட்செலவு என்பவற்றால், உலகின் மிக நீளமான மலைக்கீழ் சுரங்கப்பாதை இன்று வெற்றிகரமாகத் திறக்கப்பட்டது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்