Posts

உலகின் மிக நிளமான கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை

Image
உலகின் மிக நிளமான புகையிரத சுரங்கங்கப் பாதை சுவிஸ்லாந்தின் கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை ஆனது 15.10.2010 வெள்ளிகிழமை நேற்று கடைசி 2 மீற்றர் நிளமான பாறை துளையிடப்பட்டு புகையிரத சுரங்கங்கப் பாதை முடிவுக்கு வந்தது. இதனுடைய நீளம் 35.4 miles மைல்கள் (57km கிலோமீற்றர்).இது புகையிரத சுரங்கங்கப் பாதையின் ஒரு முக்கியமான மைல் கல்லாகும். ஜரோப்பாவின் அதிவேக புகையிர தொடர்பாடலுக்க இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும் ஜரோப்பாவின் அதிவேக புகையிர தொடர்பாடலுக்க இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும் இந்தச் சுரங்கப் பாதையானது 2017ம் ஆண்டளவில் பாவனைக்கு திறந்துவிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். சுவிஸ் அரசாங்கத்தின் தகவல்களின் பிரகாரம் மிக ஆளமான சுரங்கத்தில் புதிய முறைமைகளுடன் காற்றோட்டமானதாகவும் அபாயங்களிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பானதாகவும் உலகில் பாதுகாப்பான சுரங்கப் பாதையாக இந்தச் சுரங்கப் பாதை விளங்குமென தெரிவிக்கப்படுகின்றது. இந்த சுரங்கமானது வடக்கு சுவிட்சர்லாந்தினையும் ரிசினோ பிரதேசத்தினையும் இணைக்கும் வகையில் அல்ப்ஸ் மலையினூடாக அமைக்கப்பட்டது.

மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச்சி

Image
அ ணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உயிர் அழிவு ஏற்பட்ட பின் சுடுகாடாக மாறியிருக்கும் பிராந்தியத்தை பார்க்க கூடிய ஒரு உயிரினம் ஒன்று உள்ளது என்றால் அது வீட்டில் வாழும் கரப்பான் பூச்சிதான். கரப்பான் பூச்சி மனிதனை விட பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் இவை தோன்றியது மனித இனம் தோன்றுவதற்கு முன். அதாவது 350 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியவை. உலகின் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வாழும் கரப்பான் பூச்சியின் தாயகம் ஜேர்மனி நாடாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாகும். தற்போது உலகில் சுமார் 3490 கரப்பான் இனங்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஆறு குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி தலை நெஞ்சு வயிறு எனும் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு மூன்று சோடி கால்களும்ஒரு சோடி உணர்கொம்பும் உண்டு.கரப்பான் பூச்சிக்கு முதுகெலும்பு கிடையாது. இரண்டு சோடி அல்லது ஒரு சோடி சிறகுகள் கணப்பட்டாலும் சில கரப்பான் பூச்சிக்கு சிறகுகள் கிடையாது.கரப்பான் பூச்சியின் இரத்தம...

பிறந்த நாள் வாழ்த்து (Prasath Mendis Appu)

Image
இன்று தனது 27 வது பிறந்த தினத்தை கொண்டாடும் எமது www.karaitivu.org இணையத்தளத்தின் ஸ்தாபக ஆசிரியரும்,காரைதீவின் இணையத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருபவருமான Dr. மென்டிஸ் அப்பு பிரசாத் Prasath Mendis Appu அவர்கள் தனது பிறந்த தினத்தை 05.10.2010 கொண்டாடுகின்றார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க என karaitivu.org WebTeam , வலைப்பூ நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம்

Image
அம்பர் ( amber ) என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக் குறைய கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் ஆகும். அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை பொன்னம்பர் பூவம்பர் மீனம்பர் தீயின்வயிரம் செம்மீன் வயிரம் மலக்கனம் கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது. மரப்பிசினில் விழுந்துவிட்ட சிறு பூச்சிகளும் அப்படியே காலத்தால் உறைந்திருப்பது பார்க்க வியப்பூட்டுவதாகும். இப்படி தொல் பழங்காலத்து பயினி மரம் போன்ற மரங்களின் மரப்பிசினில் விழுந்து விட்ட பூச்சிகளில் சில இன்று நிலவுலகில் இல்லாமல் முற்றுமாய் அற்றுப்போய்விட்டவை. இந்த அம்பர் கட்டிகள் பால்ட்டிக் கடற்கரைகளிலும் கடலடியிலும் கிடைக்கின்றன. சில சிறு அம்பர் கட்டிகள் மீனின் வயிற்றில் இருந்தும் எடுத்துள்ளனர். திட்டப்படாத அம்பர் கற்கள் திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் 'அம்பர்' எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது . வாசனை பொருட்களில் எத்தனையோ ரகங்கள்...

வியக்க வைக்கும் கறையான்களின் உலகம்

Image
கறையான்கள் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும் இப்பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை அதற்குரியத்தொல்லுயிர் எச்சம் மற்றும் அம்பர் உறுதிசெய்கின்றன கறையான்களை வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கின்றனர். இன்றையக் கறையான்களில் பத்து சதவிகிதமே நமக்கு பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும். மற்றவை தேவையில்லாதகளை உண்டே வாழ்கின்றன. இக்கறையான்களின் வாழிடக் காற்றோட்ட நு ட்பங்களை நாம் அவசியம் அறிய வேண்டும் கரையான்களின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவித மிதவை உந்து விசைகளை உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று உள்ளீடற்ற குழாய் மூலம் மேலே வருகிறது. அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிசன் கரியமில வாயு வெப்பம் நீராவி ஆகியன அடிப்பரப்புக் குழாய் வழியாக புற்றின் வெளிக்காற்றுடன் வேதியியல் பரிமாற்றம் செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று மீண்டும் புற்றுக்குள் உள்ளீடற்ற குழாய் மற்றும் அடிப்பரப்புக் குழாய்கள் வழியாக உள்ளிழுக்கப்படும். இங்ஙனம் வெளிக்காற்று புற்றினுள் சென்று புற்றின் உட்புறத்திற்க்குச் சென்றடைந்து புற்றின் உட்புற வெப்பத்தைத் தணித்து கு...

தேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள்

Image
உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன் , பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்...

எங்களுக்கென்று ஒரு தனி Tamil Bamini keybord Layout

Image
Tamil Bamini keybord Layout for windows by Prasath (karaitivu.org) இவ் மென்பொருளை karaitivu.org File Cabinet ல் இருந்து (http://www.karaitivu.org/Home/file-cabinet) தரவிறக்கம் செய்யவும். இம்மென்பொருளானது Beta நிலையில் உள்ளது. மென்பொருளை பாவிக்கும் போது பிழைகள் (Bugs) ஏற்படின் info@karaitivu.org க்கு அறியத்தரவும். BamiSATH மென் பொருளானது இலவசமாக, எந்தவொரு உத்தரவாதமும் இன்றியே வழங்கப்படுகிறது. http://www.karaitivu.org/ *Note: BamiSATH மென்பெருளை தரவிறக்கம் வழங்கும் அனுமதி karaitivu.org க்கு மட்டுமே உள்ளது. உங்கள் இணையத்தளத்திலும் வளங்க விரும்பின் http://www.karaitivu.org/Home/file-cabinet எனும் இணைய முகவரியை உங்கள் இணையத்தளத்தில் கொடுக்கவும். இது பற்றிய உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மேலதிக தகவலுக்கு Prasath Mendis Appu sathpra@gmail.com