பூமியைத் தாக்கவிருக்கும் பாரிய சூரியப் புயல்

சூரியப் புயல் என்றால் என்ன ?

சூரியனில் நிகழும் தொடர்ச்சியான அணுக்கருத்தாக்க விளைவுகளின் போது நிகழக் கூடிய அசாதாரண நிகழ்வுகளால் கக்கப்படும் அதிசக்தி வாய்ந்த சக்தி அலைகளும் துணிக்கைகளும் மின்காந்தப் புயலாக மாறி விண்ணில் பரவி பூமி போன்ற கோள்களை நோக்கி வந்து தாக்குகின்றன. இதுவே சூரியப் புயல் எனப்படுகிறது

இதனால் ஏற்படும் விளைவு?

அந்த துணிக்கைகள் மணிக்கு 6,400,000 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் பூமியை தாக்கும் போது பூமியின் காந்தப் புலம் அவற்றிற்கான தடுப்புச் சுவராக நின்று தாங்கிக் கொள்ளும். இருந்தாலும் அந்தத் துணிக்கைகள் கொண்டுள்ள ஏற்றம் காரணமாக அவை இந்த மோதலின் போது பிறப்பிக்கும் சக்தி அலைகள் மனிதனின் இலத்திரனியல் மற்றும் மின் காந்த அலையில் இயக்கப்படும் தொழில்நுட்பங்களை (தகவல்தொடர்பு, செய்மதித் தொலைகாட்சி சேவைகள் போன்றவை உள்ளடங்க) பாதிக்கச் செய்யும்.

இதனால் செய்மதிகள், விமானப் போக்குவரத்துக்கள், மின்னியல் உபகரணங்கள்,மின்சார நிலைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.



பூமியை மிக விரைவில்  08-03-2012 முதல் 10-03-2012 பாரிய சூர்யப்புயல் தாக்கவிருப்பதால், மின்கட்டமைப்புக்கள், செய்மதிகள் மற்றும் விமானப் பாதைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது சூரியனில் இருந்து கிளம்பி இருக்கு இந்த மின்காந்தப் புயல் கடந்த 5 ஆண்டுகளில் பெரியது என்பதுடன் வலுவானதாக இருக்கிறதாம்

கிறின் வீச் நேரம் 6 தொடக்கம் 10 மணிக்குள் பூமியை இந்த சூரியப் புயல் தாக்கலாம் என அமெரிக்க காலநிலை விசேட நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த வார ஆரம்பத்தில் சூரியனில் இருந்து வெளியான ஒளிக்கீற்று காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் உள்ளவர்கள் இன்று இரவு இதனை பார்க்கக்கூடிய வாய்ப்புள்ளதாக பிரித்தானிய ஆய்வு நிலையம் கூறியுள்ளதாக பி.பி.சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு பூமத்திய ரேகைப் பகுதிகளில் இதனைத் தெளிவாக அவதானிக்க முடியும் எனவும் இதன் விளைவுகள் துருவப் பிரதேசங்களின் மிகவும் அதிகமான பாதிப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் விமான போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989ம் ஆண்டு தாக்கியது. தொடர்ந்து 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்து-விட்டது.

http://www.space.com/12581-stunning-photos-solar-storms-flares-sun-weather.html

Comments

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்