அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் பை நாளும் மார்ச் 14

பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன \pi \, என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. . அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண் அதாவது 3.14 என்பது அண்ணளவாக  ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது.(π = 3.1415926).

பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல்  (\pi \, யின் பரவலாக அறிந்த அண்ணளவு \frac{22}{7} ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது. அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.

\pi \,  நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது
 

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் Albert Einstein மார்ச் 14 1879 - ஏப்ரல் 18 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை புள்ளியியற் பொறிமுறை  (statistical mechanics)  மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும் கோட்பாட்டு இயற்பியலில்  (Theoretical physics)  அவர் செய்த சேவைக்காகவும் 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல் அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல் புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்) 'இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்' என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.
 
நன்றி இணையம்

Comments

  1. அருமையான தகவல் ! நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. நன்றி உங்கள் கருத்துக்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்