முதன் முறையாக புதனில் இறங்கும் அமெரிக்க விண்கலம்


கடந்த 2004&ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஏவிய ‘மெசஞ்சர்’ விண்கலம் 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தில் அடுத்த மாதம் தரையிறங்க உள்ளது.

சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ புதன் கோள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது.

புதன் கோள் பற்றிய ஆராய்ச்சிக்காக ‘மெரைனர்10’ என்ற விண்கலத்தை நாசா கடந்த 1973&ம் ஆண்டு அனுப்பியது. அதன் பிறகு, பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த 2004&ம் ஆண்டு ஆகஸ்ட் 3&ம் தேதி ‘மெசஞ்சர்’ என்ற விண்கலத்தை புதனுக்கு அனுப்பியது நாசா.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து மெசஞ்சர் விண்கலத்தை சுமந்துகொண்டு டெல்டா&2 ராக்கெட் போகிறது.. போகிறது.. போய்க்கொண்டே இருக்கிறது.

பூமியில் இருந்து புறப்பட்டு வெள்ளி கிரகத்தை தாண்டி தற்போது புதனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வினாடிக்கு 640 கி.மீ. என்ற வேகத்தில்
பாயும் அந்த ராக்கெட் 6 ஆண்டு 7 மாதத்தில் சுமார் 790 கோடி கி.மீ. தூர பயணத்துக்கு பிறகு தற்போது புதன் கிரகத்தை நெருங்கியிருக்கிறது. சூரியனுக்கு ரொம்ப நெருக்கமான கிரகம் என்பதால் வெயில் அதிகமாம்.

பூமியில் இருக்கும் சூரிய வெப்பத்தைவிட 11 மடங்கு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதிக வெப்பத்தையும் தாங்கும் விதத்தில் வெளிப்புற பகுதிகள் மிகவும் பாதுகாப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக மெசஞ்சர் திட்ட விஞ்ஞானி லூயிஸ் பிராக்டர் தெரிவித்தார்.

புதனின் மண்தன்மை, வெப்பம், சுற்றுப்பகுதி, வானிலை உள்பட சகல அம்சங்களையும் ஆராய்வதற்கு ஏற்ப அதிநவீன சென்சார்கள், தொலைதொடர்பு சாதனங்கள், வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவிகள், நவீன கம்ப்யூட்டர்கள், கேமராக்கள் ஆகியவை மெசஞ்சர் விண்கலத்தில் இருக்கின்றன.

6 ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் வகையில் புதனின் வட்டப்பாதைக்குள் மெசஞ்சர் அடுத்த மாதம் 17&ம் நுழைய உள்ளது. இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

நன்றி:- இணையம்

Comments

  1. நல்லதொரு தகவல். பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  2. நன்றி.sakthistudycentre-கருன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

நன்னம்பிக்கை முனை cape of good hope

நம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்