ஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள்
மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.
பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல் இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித் தவிக்கின்றது.
Tamil : Oridhazh thamarai
English : Hybanthus
Telugu : Nilakobari
Malayalam : Orilai thamarai
Hindi : Ratna purush
Bot. Name : Hybanthus enneaspermus

இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது.
இதற்கு இரத்தின புருஷ் என்ற பெயரும் உண்டு
இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும். ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.
மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.
உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.
சுரக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும்.
உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது.
இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.
ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை, தண்டு, வேர், பூ, காய்) நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
சீரிதழ்த் தாமரைவாழ் செய்ய மடவனமே?
ஓரிதழ்த் தாமரையை யுண்
- அகத்தியர் குணபாடம்
நல்ல தகவல் நன்றி
ReplyDeleteதகவலுக்கு நன்றி சகோதரா... பதிவு அருமை... வாழ்த்துக்கள் சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ReplyDeleteஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html
நன்றி சகோதரா ம.தி.சுதா
ReplyDeleteஓரிதழ் தாமரை வேண்டுவோர் இந்த மெயிலில் தொடர்பு கொண்டால் செடியாக கிடைக்கும்
ReplyDeleteஎன்பதை தெரிவித்துக்கொள்கிறோம் தொடர்புக்கு :
(If any one needs this herbel plant please contact)
hybanthus.enneaspermus@gmail.com
http://hybanthus-enneaspermus.blogspot.com/
ஒரித்ல் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் பச்சை செடியாகவும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123
ReplyDeleteஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123
ReplyDeleteநீர்முள்ளி 200 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 100 கிராம் நெருஞ்சி 100 கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட அனுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123
ReplyDeleteநீர்முள்ளி 200 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 100 கிராம் நெருஞ்சி 100 கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட அனுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123
ReplyDeleteநீர்முள்ளி 200 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 100 கிராம் நெருஞ்சி 100 கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட அனுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123
ReplyDelete