கொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் தொகுப்பு-01
ஆபிரகாம் லிங்க்கன்

ஜேம்ஸ் கார்ஃபீல்ட்
ஜேம்ஸ் ஏபிராம் கார்ஃபீல்ட் நவம்பர் 19 1831 – செப்டம்பர் 19 1881) ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் படுகொலை செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே அதிபர் பதவியில் இருந்தார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் இவரின் அரசியல் எதிராளியான சார்ல்ஸ் கிட்டோ என்பவனால் ஜூலை 2 1881 இல் காலை 9:30 மணிக்கு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நிலையில் செப்டம்பர் 19 இல் இவர் இறந்தார்
பத்திரிசு லுமும்பா
பத்திரிசு எமெரி லுமும்பா (ஜூலை 2 1925 – ஜனவரி 17 1961) ஆபிரிக்கத் தலைவரும் கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே பெல்ஜியத்திடம் இருந்து தமது நாட்டை ஜூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்

ஆபிரகாம் லிங்க்கன் (பிறப்பு பெப்ரவரி 12 1809—இறப்பு ஏப்ரல் 15 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் ரிப்பப்ளிக்கன் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுச் தலைவராக வெற்றி பெற்றார். 1865 இவர் வாஷிங்ட்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்
ஜேம்ஸ் கார்ஃபீல்ட்
.jpg)
பத்திரிசு லுமும்பா

ஆங் சான்
ஜெனரல் ஆங் சான் பெப்ரவரி 13 1915 – ஜூலை 19 1947) என்பவர் பர்மாவின் புரட்சியாளர் தேசியவாதி இராணுவ மேஜர் மற்றும் அரசியல்வாதி ஆவார். ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை டிசம்பர் 26 1942 இல் உருவாக்கினார். இவரே பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் முதன்மையானவர். ஆனாலும் பர்மா விடுதலை அடைய ஆறு மாதங்களின் முன்னரே படுகொலை செய்யப்பட்டார்
இந்திரா காந்தி
இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். பிறப்பு நவம்பர் 19 1917அலகாபாத் உத்தரப் பிரதேசம்ஜனவரி 19 1966 இல் பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.அக்டோபர் 31 1984 இல் சீக்கியர்களான அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திரா காந்தி

முகமது நஜிபுல்லா
நஜிபுல்லா பாஷ்தூ ஆகஸ்ட் 1947 - செப்டம்பர் 27 1996) கம்யூனிச ஆப்கானிஸ்தானின் நான்காவதும் கடைசி அதிபராகவும் இருந்தவர். முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் 1996 இல் காபூல் நகரைக் கைப்பற்றிய போது நஜிபுல்லா மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பாஷ்டன் இனத்தில் பிறந்தவர். காபூல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் மருத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்
நஜிபுல்லா பாஷ்தூ ஆகஸ்ட் 1947 - செப்டம்பர் 27 1996) கம்யூனிச ஆப்கானிஸ்தானின் நான்காவதும் கடைசி அதிபராகவும் இருந்தவர். முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் 1996 இல் காபூல் நகரைக் கைப்பற்றிய போது நஜிபுல்லா மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பாஷ்டன் இனத்தில் பிறந்தவர். காபூல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் மருத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்
good post keep it Tharshan
ReplyDelete