என் மனதை கொத்திவிட்டு கூடுகட்டி குடியும் ஏறிவிட்ட மரங்கொத்தி பறவை நீ... என் மனதை கொத்தி விடு போகாதே.. . அவுஸ்திரேலியா நியூசிலாந்து மடகாஸ்கர் மற்றும் தென் - வட முனைப்பகுதிகளைத் தவிர்த்து உலகெங்கும் காணப்படும் பறவையாகும். பெரும்பாலான சிற்றினங்கள் காடுகளிலும் மரங்கள் உள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. எனினும் சில இனங்கள் மரங்களற்ற பாறைப்பகுதிகளிலும் பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. மரங்கொத்திகளில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மரங்களிலும் வாழும் பூச்சிகளே இவற்றின் முக்கிய உணவு. மரங்கொத்தி பறவைகள் வனம் மற்றும் தோட்டங்களில் உள்ள மரங்களில் கூடு அமைத்து வசித்து வருகின்றன. மரங்கொத்திக்கு சிறந்த செவிப்புலன் உண்டு . அது மரத்தில் தொத்திகொண்டவுடன் காதைவைத்துக் கேட்கும் . உள்ளே பூச்சிகள் நடமாட்டம் காதில் விழுந்தவுடன் உடனே மூக்கால் மரத்தை துளைத்து நீண்ட நாக்கால் பூச்சிகள் லபக்!. மரப் பட்டைகளின் இடுக்குகளில் காணப்படும் புழு வண்டு மற்றும் பூச்சிகளை உண்பதற்காக மரங்களை கொத்துகின்றன; தவிர மரங்களில் ஓட்டை அமைத்து அதில் தங்களுக்கான குடியிருப்புகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றன. மரங்கொத்த...
ஏன்? எதற்கு ? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் . பல அடிப்படை கேள்விகள் மனித மனங்களுக்குள் இருந்து வருவதே இல்லை ..அவற்றில் ஒன்று தான் இது . ஏன் வானம் நீலம் ? சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது .இதனை வானவில்லில் அவதானிக்கலா வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது . ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை . சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன . குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது . உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன . அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது . ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின...
நல்ல தேடல்
ReplyDeleteமுயற்சிக்கு வாழ்த்துகள்