கரப்பான்கள் மட்டுமின்றி பூச்சிகளில் பலவும் தலை துண்டிக்கப்பட்ட பிறகும்கூட சிறிது காலம் எப்படி உயிர் வாழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு, அது ஏன் மனிதர்கள் உள்பட பாலூட்டி உயிரினங்களால் முடிவதில்லை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அடிப்படையில் பாலூட்டிகளின் தலை துண்டிக்கப்பட்டால், ரத்த இழப்பு அதீதமாக நடக்கிறது. இதன் காரணமாக உடலின் முக்கிய திசுக்களுக்கு ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்துகளும் கொண்டு செல்லப்படுவது தடைபடுகிறது. அதோடு, பாலூட்டிகள் வாய் மற்றும் மூக்கு வழியாகவே சுவாசிக்கின்றன. இந்தச் செயல்பாட்டைப் பிரதானமாகக் கட்டுப்படுத்துவது மூளைதான். ஆகையால், தலை துண்டிக்கப்பட்டால் முதலில் சுவாசம் தடைபடும். ஒருவேளை ரத்த இழப்பைத் தடுத்து, சுவாசத்திற்கு வழி செய்தாலும்கூட மனித உடலால் தலையின்றிச் சாப்பிட முடியாது, சாப்பிடாமல் உயிர் வாழவும் முடியாது. இப்படி ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட பல காரணிகள் சில நிமிடங்களிலேயே உயிரிழப்பை ஏற்படுத்தக் காரணமாகின்றன. ஆனால், கரப்பான்களுக்கு மனிதர்களைப் போன்ற உடலமைப்பு கிடையாது. கரப்பான்கள் நம்மைப் போல வாய் அல்லது மூக்கு வழியாகச் சுவாசிப்பது இல்லை. அவற்றின் உடலில...
Hi nice blog.
ReplyDeletethanks
ReplyDelete