கொடிது கொடிது கோபம் கொடிது ! - ANGER

கொடிது கொடிது கோபம் கொடிது ! - ANGER
A STORY TO CONTROL ANGER....

எங்களில் சிலர் தொட்டதொன்னூருக்கும் கோபப்படும் சந்தர்ப்பங்கள் உள. சிலர்(எப்பவாவது) ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை கோபம் கொள்வதும் உண்டு.சிலருக்கு எது நடந்தாலும் கோபமே வராது. மேற்கூறியதில், நீங்கள் எப்படிபட்டவராயிருந்தாலும்..இந்தக்கதை உங்கள் வாழ்க்கையில், எதோ ஒரு விதத்தில் எதோ ஒருசந்தர்ப்பத்தில் நீங்கள் கோபப்படும்போது நினைத்து பார்க்க வைக்கும் என்ற எண்ணத்தில் என் வலைப்பூவில் தன் இதழ் விரித்துப்பதிவாகிறது....எந்த நேரமும் எதற்கெடுத்தாலும்கோபப்படும் ஒரு பையன் இருந்தான்.

There once was a little boy who had a bad temper.

இதைக்கண்ட அவனுடைய தந்தை அவனிடம் ஒரு பை நிறைய ஆணிகளை கொடுத்து, கோபம் வரும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அந்த ஆணிகளை ஒவ்வொன்றாக மதிற்சுவரில் அறையச்சொன்னார்.

His Father gave him a bag of nails and told him that every time he lost his temper, he must hammer a nail into the backof the fence.

முதல்நாள் அவன் 37 ஆணிகளை மதிற்சுவரில் அறைந்திருந்தான். அதன் பின்னர் படிப்படியாக அறையப்பட்ட ஆணிகளின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டு போனது, அவனுடைய கோபம் குறைந்ததை போல..!ஒரு சில வாரங்களில் தனது கோபத்தை நன்கு கட்டுப்படுத்தவும் பழகிக்கொண்டான்.(ஒருகட்டத்தில் ஆணிகளை சுவரில் அறைவதைக்காட்டிலும், தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்துவது அவனுக்கு லேசாகிப்போனது)

The first day the boy had driven 37 nails into the fence. Over the next few weeks, as he learned to control his anger, the number of nails hammered daily gradually dwindled down. He discovered it was easier to hold his temper than to drive those nails into the fence.

ஒருநாள் முற்று முழுதாக 'கோபம் என்றால் என்ன'? என்ற அளவுக்கு மிகவும் பக்குவப்பட்டிருந்தான். இதை தன் தந்தைக்கும் தெரியப்படுத்தினான். இதைக்கேட்ட தந்தை இனி கோபத்தைக்கட்டுப்படுத்தும் போதெல்லாம், இதுவரை அறைந்த ஆணிகளை மீளப்பிடுங்கச்சொன்னார்.

Finally the ! day came when the boy didn't lose his temper at all. He told his father about it and the father suggested that the boy now pull out one nail for each day that he was able to hold his temper.

ஒருவாறு, அறையப்பட்ட ஆணிகளை எல்லாம் தந்தையின் ஆலோசனைப்படி பிடுங்கி முடிந்தபின், அதையும் தந்தையிடம் கூறினான். அவனைப்பார்த்து புன்னகைத்த தந்தை அவனை அந்த மதிற்சுவர் அருகில் அழைத்துச்சென்றார். "நான் சொன்னது போலவே நடந்து கொண்டாய் மகனே... ஆனால் பார் இந்த ஓட்டைகளை...! ஆணிகள் (அறையப்பட்டு) இப்போது பிடுங்கப்பட்டிருந்தாலும்கூட இனி இந்த மதிற்சுவர் மீண்டும் பழைய நிலையை அடைய முடியாது. இதைப்போலத்தான் நீ கோபத்தின் போது சொல்லும் கடுஞ்சொற்களும் ஆறாத்தழும்புகளை மனதில் விட்டுச்செல்லும். அவற்றை நீக்கவோ மறக்கவோ முடியாது.

The days passed and the young boy was finally able to tell his father that all the nails were gone. The father took and led him to the fence He said, "You have done well, my son, but look at the holes in the fence. The fence will never bethe same. When you say things in anger, they leave a scar just like this one.

கதை கூறும் படிப்பினை :
நீங்கள் எத்தனை முறை மன்னிப்பு கேட்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. (கோபப்பட்ட தருணங்களில்) எத்தனை தடவை இன்னொருவரை நோகடிக்கும் வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்

"தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு "

THE MOTIVE OF THE STORY
It won't matter how many times you say "I'm sorry", the wound is still there. A verbal wound is bad than a physical one.


இப்போதெல்லாம் நானும்கூட கோபப்படும் தருணங்களில் இந்த கதையை நினைத்துப்பார்க்கிறேன்... நீங்கள் எப்படி ?

Comments

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்