வயது 78 சிட்னி துறைமுகப் பாலம்

இரவில் சிட்னி துறைமுகம். இடது பக்கத்தில் ஒப்பேரா மாளிகையும் வர்த்தக மையம் நடுவிலும்இ துறைமுகப் பாலம் வலது பக்கத்திலும் காணப்படுகின்றன


சிட்னி துறைமுகத்தின் தோற்றம்


பாலத்தின் கட்டுமானத்திற்கு 6000000 ஆணிகள் பயன்படுத்தப்பட்டன.

  • ஜாக்சன் துறை எனும் சிட்னி துறைமுகம் தான் உலகிற்கு அறிமுகமான சிட்னியின் முகம்.
  • 1788இல் பிரித்தானியாவிலிருந்து வந்த ஆர்தர் ஃபிலிப் என்பவர் சிட்னி நகரத்தை அமைத்தார்.
  • மார்ச் 19 1932 - சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

அதிகாரபூர்வ பெயர் - சிட்னி துறைமுகப் பாலம்

கடப்பது - ஜாக்சன் துறைமுகம்

மொத்த நீளம் - 1149 மீ (3770 அடி).

அகலம் - 49 மீ (161 அடி)
உயரம் - 139 மீ (456 அடி}

  • சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் (arch bridge) ஆகும்
  • .சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் (CBD) வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது.
  • சிட்னிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும்.
  • இந்த மேம்பாலத்தின் வளைந்த தோற்றம் காரணமாக உள்ளூர் மக்களால் இது 'கோர்ட்டுக் கொழுவி' (Coathanger) என்று அழைக்கப்படுகின்றது.
  • கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும்.அத்துடன் உருக்கினாலான மிக உயரமான பாலமும் ஆகும்.
  • இதன் அதி உயர் புள்ளி பாலத்தில் இருந்து 134 மீட்டர்கள் (429.6 அடி) ஆகும்.
  • இது உலகின் நான்காவது நீளமான வளைவுப் பாலமாகும்.
  • 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 1400 தொழிலாளர்களுடன் 8 ஆண்டுகள் காலத்தில் 4.2 மில்லியன் பவுண்ட் செலவில் பாலம் நிர்மாணிக்கப்பட்டது.
  • 6 மில்லியன் ஆணிகளும் 53000 தொன் உருக்கும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன.
  • 1932 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் 'ஜோன் லாங்' இப்பாலத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
  • பாலத்தின் கட்டுமானத்திற்கு 6000000 ஆணிகள் பயன்படுத்தப்பட்டன.

Comments

Post a Comment

Popular posts from this blog

ம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா?

மரங்கொத்திப்பறவையின் நாக்கு மிகவும் நீளமாக இருப்பது ஏன் தெரியுமா?

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம்