மிக அரிதாகவே ஏற்படும் தீ பிசாசு

ஆஸ்திரேலியா, அலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் (திங்கட்கிழமை 18/09/2012) தோன்றிய fire tornado இது. மிக அரிதாகவே ஏற்படும் இதை தீ பிசாசு (fire devil) என்றும் அழைப்பார்கள். நேற்று இதை நேரில் கண்டவர்கள், “போர் விமானம் ஒன்று எழுப்பும் ஒலி போல கேட்டது. திடீரென வானத்துக்கும் பூமிக்குமான நெருப்பு கீற்று உருவானது” என்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடத்துக்கு மேல் fire tornado நீடிக்கவில்லை. அதற்குள் கிளிக் செய்யப்பட்ட போட்டோ இது. மிகப் பெரிய நெருப்பு சுழல் காற்று வடிவை அடைதல் எரி சுழல் காற்று (Fire whirl அல்லது fire tornado) எனப்படும். இது பொதுவாக காட்டுத்தீகளின் போது உருவாகும். அதிக வெப்பத்தின் காரணமாக காற்று மேலெளும்பலாலேயே இவ்வாறு உருவாகிறது. 1923ல் ஜப்பான் மற்றும் 2012ல் ஹவாய் ஆகிய இடங்களில் எரிசுழல் காற்று உருவாகியுள்ளது.