புது மிருகம் – சிறுத்தையா, புலியா?
சுமத்ரா தீவு காடுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள புதுவகை மிருகம் ஒன்று, ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. புலி போன்றும், சிறுத்தை போன்றும் காணப்படும் அந்த மிருகத்திற்கு என்ன பெயர் வைப்பது என, இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மிருகங்களிலேயே மிகவும் ஆக்ரோஷமானதாக கருதப்படு பவை சிறுத்தை மற்றும் புலி. உடல் முழுவதும் புள்ளிகள், கோடுகளுடன் காணப்படும் இந்த வகை மிருகங்கள் ஆசிய காடுகளில் அதிகம் காணப் படுகின்றன. இந்த இரண்டு மிருகங்களின் கலவை போல் காணப்படும் மிருகம் சமீபத்தில் சுமத்ரா, பொர்னியோ காடுகளில் காணப்பட்டன. புலியைப் போன்ற முகத்துடனும், சிறுத்தை போன்ற உடல் அமைப்புடனும் உள்ள இந்த வகை மிருகம் எப்படி உருவானது என ஆராய்ச்சி யாளர்களை குழப்பியுள்ளது. இந்தோ னேசியா நாட்டில் சுமத்ரா காடுகளில் மிருக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி யாளர்களின் கேமராவில் இந்த மிருகத்தின் நடமாட்டம் பதிவானது. ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் உள்ள லிப்னிஸ் காட்டு மிருக ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆன்ட்ரஸ் வில்டிங் தலைமையிலான குழு, இந்த மிருகம் குறித்த தீவிர ஆராய்ச்சியில் இப்போது ஈடுபட்டுள்ளது. “நகரங்கள்