அனைவருக்கும் சந்தோசமான புதுவருட வாழ்த்துக்கள் பனாமா கால்வாய் பனாமா கால்வாய் பசுபிக் பெருங்கடலையும் அத்திலாந்திக் பெருங்கடலையும் அமெரிக்கக் கண்டங்களிடையே இணைக்கும் செயற்கைக் கால்வாய் ஆகும். இது அமைக்கப்படும் முன்னர் கப்பல்கள் தென்னமெரிக்கக் கண்டத்தைச் சுற்றியே செல்ல வேண்டியிருதது. பதினாறாம் நூற்றாண்டிலேயே இத்தகைய கால்வாய்க்கான எண்ணம் இருந்தது. 1880 இல் பிரான்சு தலைமையில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. 22000 தொழிலாளர்கள் இறந்த இம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. 1900களில் ஐக்கிய அமெரிக்கா மீண்டும் இப்பணியைத் தொடங்கி 1914 இல் பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. பிரெஞ்சு ஐக்கிய அமெரிக்க முயற்சிகளில் மொத்தமாக 27500 தொழிலாளர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கால்வாய் 78 கிமீ நீளமானதாகும் கால்வாய் அளவுகள் நீளம்: 59 மைல்கள் ஆழம்: 41 - 45 அடிகள் அகலம் 500 - 1000 அடிகள் (கால்வாயின் மிக குறுகிய அடிப்பகுதி அகலம் 300 அடிகள்)இந்த கால்வாயில் மூன்று பெரிய பிரிவுகள் இருக்கிறது எனவே எல்லா இடங்களிலும் ஒரே அகலம் ஆழம் இல்லை. அமைப்பு பனாமா கால்வாயில் மூன்று பெரிய நீர் கதவுகள் வைத்து water locks) கால்வாயில்...