கரப்பான் பூச்சி தலை இல்லாமல் வாழுமா?

 


கரப்பான்கள் மட்டுமின்றி பூச்சிகளில் பலவும் தலை துண்டிக்கப்பட்ட பிறகும்கூட சிறிது காலம் எப்படி உயிர் வாழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு, அது ஏன் மனிதர்கள் உள்பட பாலூட்டி உயிரினங்களால் முடிவதில்லை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அடிப்படையில் பாலூட்டிகளின் தலை துண்டிக்கப்பட்டால், ரத்த இழப்பு அதீதமாக நடக்கிறது. இதன் காரணமாக உடலின் முக்கிய திசுக்களுக்கு ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்துகளும் கொண்டு செல்லப்படுவது தடைபடுகிறது.

அதோடு, பாலூட்டிகள் வாய் மற்றும் மூக்கு வழியாகவே சுவாசிக்கின்றன. இந்தச் செயல்பாட்டைப் பிரதானமாகக் கட்டுப்படுத்துவது மூளைதான். ஆகையால், தலை துண்டிக்கப்பட்டால் முதலில் சுவாசம் தடைபடும்.

ஒருவேளை ரத்த இழப்பைத் தடுத்து, சுவாசத்திற்கு வழி செய்தாலும்கூட மனித உடலால் தலையின்றிச் சாப்பிட முடியாது, சாப்பிடாமல் உயிர் வாழவும் முடியாது. இப்படி ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட பல காரணிகள் சில நிமிடங்களிலேயே உயிரிழப்பை ஏற்படுத்தக் காரணமாகின்றன.

ஆனால், கரப்பான்களுக்கு மனிதர்களைப் போன்ற உடலமைப்பு கிடையாது. கரப்பான்கள் நம்மைப் போல வாய் அல்லது மூக்கு வழியாகச் சுவாசிப்பது இல்லை. அவற்றின் உடலில் பரவியிருக்கும் காற்றுக் குழாய்களின் (tracheae) வழியாகச் சுவாசிக்கின்றன. உடலின் பக்கவாட்டில் உள்ள சிறிய திறப்புகளுடன் இந்தக் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இவை வால்வுகளை போலச் செயல்பட்டு, உடலின் திசுக்களுக்கும் பிற உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகின்றன. இவற்றுக்கு பாலூட்டிகளைப் போல மூக்கு அல்லது வாய் மூலம் சுவாசித்து, ரத்தம் வழியாக ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் நுண்குழாய் அமைப்பு இல்லை. ஆகையால், உடலில் அழுத்தமும் குறைவாக இருக்கும். இதன் காரணமாகவே தலையை வெட்டிய பிறகும், கழுத்துப் பகுதி வேகமாக உறைந்து, காயம் மூடப்பட்டுவிடும். இது கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கை தவிர்ப்பதோடு, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனின் வரத்தையும் தடை செய்வதில்லை
அதிகபட்சம் எட்டு அல்லது ஒன்பது நாட்கள்.காரணம் கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலம் மூன்று தனித்தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.தலை, மார்பு, வயிறு என.இம்மூன்று மையங்களும் தனித்தனியே தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்.

நம்மைப் போல கரப்பான் பூச்சிக்கு நரம்பணுக்களின் மொத்தக் கட்டுப்பாடும் மூளையில் மட்டுமே இல்லை.

எனவே தலை துண்டிக்கப்பட்ட பிறகும் கரப்பான் உயிர்வாழும்.தலை இல்லாத கரப்பான் பட்டினியால் மட்டுமே உயிர் விடும்.கரப்பானை நீங்கள் மூன்றுமுறைக் கொல்ல வேண்டும்.அதற்கு மூன்று உயிர்.

அதோடு, "கரப்பான்களின் மூளை ஒரு சில செயல்பாடுகளை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. கரப்பான் பூச்சியின் தலையை வெட்டுவது அவற்றின் பார்வை, உணர்கொம்புகள் மற்றும் சில சிக்கலான நடத்தைகளை நிர்வகிக்கும் அதன் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியை மட்டுமே நீக்குகிறது. ஆனால், நரம்பு மண்டலம் உடல் முழுக்கப் பரவலாக இருப்பதால் உடலின் மீதமுள்ள பகுதிகள் தொடர்ந்து செயல்படுகின்றன,

இந்தக் காரணங்களால்தான், சில வேட்டையாடிகளால் இரையாக்கப்படாத வரை, தலை துண்டாக்கப்பட்ட ஒரு கரப்பான் பூச்சியால் சில நாட்களுக்கு உயிருடன் இருக்க முடிகிறது. ஆனால், அப்படி ஒரு வேட்டையாடியிடம் இருந்து தப்பிக்க அவை துரிதமாகச் சிந்தித்துச் செயலாற்றி, தப்பிக்க வேண்டும். அதற்கும் மூளையின் உதவி அவசியமில்லை 

அதாவது மூளையே இல்லாமல், கரப்பான் பூச்சிகளால் ஆபத்துக்கு எதிர்வினையாற்ற முடியும் என்கிறார் அவர். "அவற்றின் பின்புற முனையில் சென்சார்கள் உள்ளன. அந்த சென்சார்கள் காற்றின் இயக்கத்தை உணர்ந்து, ஏதேனும் வேட்டையாடி உயிரினம் பின்புறமாகத் தாக்க வந்தால் அதைக் கண்டறிந்துவிடும். இந்த சென்சார்கள் மூளைக்கு அல்ல, உடலில் உள்ள நரம்பு மையங்களுக்கு நேரடியாக சமிக்ஞைகளை அனுப்பிச் செயல்பட வைக்கின்றன."

இது மூளை இல்லாமலும்கூட துரிதமாகச் செயல்பட்டு உயிரைக் காத்துக்கொள்ள கரப்பான்களுக்கு உதவுகின்றன.



Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

நன்னம்பிக்கை முனை cape of good hope

நம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்